Tuesday, 9 October 2012

TN JCA DECISION ON RECORDED MINUTES AND AFTERMATH


அன்புத் தோழர்களே ! வணக்கம் !


     இன்று மதியம் JCA  தலைவர்கள் DPS HQRS  அவர்களை சந்தித்து DRAFT COPY  MINUTES குறித்து கேட்கச் சென்றோம். ஆனால் அவர் ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட   FINAL MINUTES  இன்  நகலை நமக்கு வழங்கினார் , அதன் நகல் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் ஏற்கனவே  அனுப்பப் பட்டதாகவும்  நம்மிடையே தெரிவித்தார். 


       05.10.12 அன்று காலை  தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற  பேச்சு வார்த்தை  குறித்தும் , பின்னர் மதியம் அதன் மீதான  CPMG, TN  உடன்  நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தை குறித்தும் நாம் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம் .  நம் வலைத்தளத்திலும்  பிரசுரித்திருந்தோம் . இது போலவே  தமிழக FNPO வலைத்தளத்திலும்  பிரசுரிக்கப் பட்டிருந்தது . திங்கள் அன்று  பேச்சு வார்த்தையின் பதிவு செய்யப்பட்ட MINUTES COPY  கிடைத்தவுடன்  இதன் மீதான  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA  கூடி முடிவெடுத்து அறிவிப்பதாக  தெரிவித்திருந்தோம். 


எனவே இந்த முடிவை நாம் கடுமையாக  மறுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்தோம் . மேலும்  நாளை  இதனை அனைத்து மாநிலச் செயலர்களும் கையெழுத்திட்டு  மறுப்புக் கடிதம்  அளிப்பதாக அவரிடம் தெரிவித்தோம்.     அதிலும் கூட  நாம் பேசிய  பிரச்சினைகள்  குறித்தோ , இருதரப்பாலும்  ஒப்புக் கொள்ளப் பட்ட  விஷயங்கள்  குறித்தோ  பதிவாகவில்லை  மாறாக  தன்னிச்சையாக CPMG TN  அவர்களால் எடுக்கப் பட்டதாக (DECISION OF THE CPMG)  சில முடிவுகள் மட்டுமே அதில் பதிவாகி  இருந்தது . மேலும் ஏற்கனவே STRIKE DEFER  செய்யப் பட்டதாகவும்  பதிவாகி இருந்தது.  குறிப்பாக அதில் தோழர் ஜெயகுமார் அவர்களின்  தற்கொலை பற்றி மட்டுமே  விசாரணை செய்யப்படும் என்று  பதிவாகி இருந்தது. விசாரணை DPS CADRE க்கு மேலான PMG CADRE இல் போடப்படாமல் அதே RANK இல் உள்ள DPS HQRS  விசாரணை செய்வார் என்றும் பதிவு செய்யப் பட்டிருந்தது .



     தொழிலாளர் நல ஆணையத்தின் வழிகாட்டுதலை மீறி BILATERAL AGREEMENT ஆக இல்லாமல் UNILATERAL  DECISION  ஆக  பதிவு செய்யப் பட்டது சட்டப்படி செல்லாது என்றும் , ஆகவே  கோரிக்கைகளின் மீது  அறிவிக்கப் பட்டபடி  வேலைநிறுத்தம் நடைபெறும்  என்றும்  இந்த முடிவு  எழுத்து பூர்வமாக LABOUR COMMISSIONER க்கும் நாளை  கையெழுத்திட்டு அளிக்கப் படும் என்றும் பதிவு செய்தோம். 


     பின்னர்  அங்கிருந்த  NFPE/FNPO  மாநிலச் செயலர்கள் ஒன்று கூடி நாளை அனைத்து மாநிலச் செயலர்களையும் ஒன்று கூட்டி  அடுத்த கட்ட தீவிர நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாக  தீர்மானித்தோம். இந்த முடிவு நாளை காலை 11.30 மணியளவில்  அனைவருக்கும்  உடனடியாக SMS  மூலம் தெரிவிக்கப்படும் . பின்னர் வலைத்தளத்தில் அறிவிக்கப்படும் .  


     எனவே தோழர்கள் அனைவரும்  போராட்ட களத்தில் அதன் வீச்சை அதிகப் படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.  நம்முடைய பொதுச் செயலர் மூலம் இலாக்கா  முதல்வரை சந்தித்து  விரிவான கடிதம் அளித்து பேசி உடன் முடிவு காணவும்  கேட்டுக் கொண்டுள்ளோம் .வதந்தியாளர்களை  நம்ப வேண்டாம்  என்றும்  கேட்டுக் கொள்கிறோம். JCA  விலிருந்து வரும் இறுதியான தகவல்களை மட்டுமே  நம்புமாறும்  கேட்டுக் கொள்கிறோம். 


Courtesy: Circle union website

No comments: