Saturday 6 October 2012

மதுரையில் நடந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமும், போராட்ட பொதுக்குழு விளக்கக்கூட்டமும்,

ஒற்றுமை ஓங்குக....

மதுரையில் 05.10.2012 அன்று, மாலை 0530 மணியளவில், மதுரை மண்டல அலுவலகத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு J.C.A. தோழர்கள், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

தென்மண்டல இயக்குனர் திரு.வ.ச. ஜெயசங்கர், ஆர்ப்பாட்டத்தினைத் தவிர்க்க வேண்டி, மாலை 0300 மணிக்கு எல்லாம் திருநெல்வேலி சென்றுவிட்டார். 

தென்மண்டல இயக்குனரால், கிட்டத்தட்ட 03.30 மணிக்கு எல்லாம் காவல்துறையினர் தெற்கு மண்டல வாயிற்கதவிற்கு அருகில்  குவிக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப் பெற்று எந்த தோழரையும் ஆர்ப்பாட்டத்திற்கு தென்மண்டலத்தின் உள்ளே நுழைய அனுமதிக்கப் படவில்லை. 

மாலை 0400 மணிக்கே தென்மண்டல அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும், அனுமதி அளிக்கப்பட்டு அலுவலகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.

சுமார் 0430 மணியளவில் இருந்தே தென்மண்டல NFPE, FNPO தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்க வந்தபோது, காவல் துறையினரால் தடுக்கப்பட்டு, தொழிற்சங்கக் கடமைகளை நிறைவேற்ற விடாமல் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டனர்.
பின்னர்  J.C.A. தலைவர்கள் சென்னை மாநில அலுவலகத்திற்கு இதை தெரிவித்த பின்னரே, சென்னை மாநில CPMG அவர்களின் உத்தரவிற்கு பின்னரே, தென்மண்டல இயக்குனர் காவல் துறையினை களைந்து செல்லப்பணித்தார்.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, மாலை 0500 மணியில் இருந்தே, அனைத்து கோட்டங்களில் இருந்தும், தூரம் பாராது, மெய் வருத்தம் கொள்ளாது, குடும்பக்கடமைகளைப் புறக்கணித்தும், தோழர் அமரர் ஜெயக்குமாரின் மரணத்திற்கு நியாயம் என்பதையே முழு மூச்சாகக் கொண்டு, அனைத்து 11 கோட்ட தோழர்களும், மதுரை மண்டலத்தை முற்றுகையிட்டு, 600 அறுநூற்றுக்கும் அதிகமான துடிப்புமிக்க தோழர், தோழியர்கள் கலந்து கொண்டனர். அஞ்சல் பெண் தோழியர்களும் எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டதும், மற்ற கோட்டத் தோழர்கள் கூட வெகு தொலைவில் இருந்தாலும் வேன் பிடித்து தென்மண்டலம் முன் வந்து இறங்கியதும் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. J.C.A. தோழர்களின் P.T.C இயக்குனர் மற்றும் மண்டல நிர்வாகத்திற்கு எதிரான முழக்கம் விண்ணை முட்டியது என்பதில் ஐயமில்லை.

தலைவர்களின் வீரவுரை.

திரு. K. நாராயணன் NFPE மண்டல செயலர், சென்னை LABOUR OFFICE கூட்டம், மற்றும், CPMG அவர்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலவரங்களை விளக்கிக் கூறியதோடு, தென் மண்டல இயக்குனராலும், மதுரை PTC இயக்குனராலும், தோழர்களும் படும் சொல்லொண்ணாத்துயரங்களை கூட்டத்தில் விளக்கி எழுச்சி உரையாற்றினார்.

திரு. G.பாஸ்கரன் FNPO மண்டல செயலர், வீரர் அமரர் ஜெயக்குமாரின் மரணத்திற்கு ம்துரை PTC `இயக்குனரின் இடைவிடாத துன்புறுத்தலேயன்றி வேறு பண நெருக்கடி தான் காரணம் என்று PTC இயக்குனரின் வாதம் பொருளற்றது என்பதற்கு கீழ்க்கண்ட காரணங்களை சுட்டிக்காட்டினார்.



பண நெருக்கடி தான் தோழர் ஜெயக்குமார் மரணத்திற்கு காரணம் என்றால்,


    1. அவர் V.R.S.ல் சென்று இருந்தால் கூட, ரூ.1500000 (பதினைந்து இலட்சங்கள்) பணத்தோடு, ஒய்வூதியமும் கிடைக்கப்பெறும் சூழல் இருக்கும் நிலையில், தற்கொலை பண்ண என்ன அவசியம் வந்தது?



    2. மேலும் 13 நாட்கள் PTC சிறைவாசக்கொடுமைக்களுக்கு பின் தற்கொலை செய்து கொண்டதும், அதற்கு மதுரை PTC இயக்குனரும், தென்மண்டல இயக்குனரும், மதுரை G.H வரை சென்று, சடலத்தை சென்னைக்கு விரைந்து அனுப்புவதற்கு துடித்ததும், உடன்பயிலும் யாரையும் பார்க்கக்கூட விடாததும், ஜெயக்குமார் அவர்களின் இறுதி ஊர்வலம் வரை சென்று, அவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, கருணை அடிப்படையில் இலாக்காவில் உடனடியாக வேலை வழங்கப்படும் என்று கூறியதும், என்று இவ்வளவு செய்தவர்கள், ஒரிரு வாரங்களுக்கு முன்னால், மதுரையில் விபத்தில் அகால மரணமடைந்த தபால்காரர் திரு. அழகுப்பாண்டி, மரணத்திற்கு வந்து இதேபோல கலந்து கொள்ளாததன் காரணம் என்னவோ என்று ஐயம் எழுப்பி வீரவுரை ஆற்றினார். 

தோழர் S.சுந்தரமூர்த்தி அவர்கள், தென்மண்டல இயக்குனரின் அடாவடித்தனத்தை, அடக்குமுறையின் தொகுப்பினை ஒவ்வொன்றாக விளக்கி, படமென நம் கண்முன் நிறுத்தி, கொடுஞ்செயல்கள் அனைத்தையும் இத்தோடு நிறுத்திக் கொள்ளச்சொல்லி இறுதி எச்சரிக்கை அளித்து வீரவுரை ஆற்றினார்.

மற்றும் அனைத்துக் கோட்டச் செயலர்களும், அவரவர்களின் அதிருப்தியினையும், தென்மண்டல இயக்குனர் மற்றும், மதுரை PTC இயக்குனரின் ஊழியர் விரோதப்போக்கினையும், அடாவடித்தனத்தையும் விளக்கிப் பேசினர்.

இறுதியாக 3 மணி நேரம் நடைபெற்ற எழுச்சி மிகு ஆர்ப்பாட்டத்திற்கு, திரு ராஜன் FNPO கோட்டச்செயலர் நன்றியுரை ஆற்றி, அறுநூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, முழங்கிய ஆர்ப்பாட்டத்தின் இறுதி வீர முழக்கம், விண்ணை மட்டுமல்ல,  திருநெல்வேலி சென்ற தென்மண்டல இயக்குனர் மற்றும், நாடாளுமன்றக்குழுவைக் காராணம் காட்டி, கோவை சென்ற இயக்குனர் P.T.C. காதுகளிலும் இடியென இறங்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை....


இப்படிக்கு, 
ஒருங்கிணைந்த புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்,
J.C.A

INCULAB ZINDABAD.

No comments: