Showing posts with label Leaders. Show all posts
Showing posts with label Leaders. Show all posts

Tuesday, 4 February 2014

JCM NATIONAL COUNCIL - COM. M. KRISHNAN AND COM I.S.. DABAS ARE NOMINATED AS MEMBERS

மாபெரும் வெற்றி ! JCM( NATIONAL COUNCIL) இல்  நம் தலைவர்கள் !


1993 இல் புதிய தொழிற்சங்க அங்கீகார விதி ஏற்படுத்தப் பட்ட பின்னர் பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும், தொடர்ந்த நீதி மன்ற வழக்குகளின் காரணமாகவும் , 1995 இல் GDS ஊழியர்களுக்கு புதிய தொழிற்சங்க அங்கீகார விதி ஏற்படுத்தப் பட்டதன் காரணமாகவும் , துறை ரீதியாக   GDS சங்கத்தை சம்மேளனத்துக்குள் சேர்த்து அங்கீகாரம் வழங்கிட மத்திய அரசு மறுத்ததை நீங்கள் அறிவீர்கள். 

உயர் நீதிமன்றத் தீர்ப்பு  2007 ஆவது ஆண்டில் வந்த பிறகு , இறுதியில் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டுமானால் GDS சங்கத்தை சேர்த்திடாமல் விண்ணப்பித்தால் , சம்மேளனத்திற்கு அங்கீகாரம் வழங்கப் படும் என்று அரசு அறிவித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும் .  இதே நிலைதான் FNPO சம்மேளனத்திற்கும் ஏற்பட்டது. 

எனவே வேறு வழியில்லாமல் , நம்முடைய  உச்ச மட்ட அமைப்பான FEDERAL COUNCIL கூட்டத்தில் , நம்முடைய  சம்மேளனத்தின் உள் அமைப்பில் , ஏற்கனவே இருந்ததுபோல GDS சங்கத்தை உறுப்பினராக வைத்திடலாம் என்றும் , அவர்களுக்கு சங்க ரீதியான அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளதால் , இலாக்காவுக்கு சம்மேளன அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும் போது  தனியே விண்ணப்பிக்கலாம் என்றும் முடிவெடுக்கப் பட்டதும்  உங்களுக்கு நினைவிருக்கும். அதன் பின் அவ்வாறே விண்ணப்பித்து பின்னர்   சம்மேளன அங்கீகாரம் பெற்றோம்.  இதுவும் உங்கள் நினைவில் இருக்கும் .

அதன் பின்னரே  JCM (DEPARTMENTAL COUNCIL) , RJCM ஆகியவை  புதுப்பிக்கப் பட்டன  என்பதும் உங்களுக்கு  நினைவிருக்கும்.  இந்த  சிக்கல்களின் காரணமாக  மத்திய அரசுடன் நேரடியாக  பேச்சு வார்த்தை நடத்த உரிமை உள்ள அமைப்பான NATIONAL COUNCIL (JCM) இல்  நமது சம்மேளனத்திலிருந்து பிரதிநிதிகள் எவரும் இடம் பெறமுடியாத சூழ் நிலை கடந்த  20 ஆண்டு காலமாக இருந்தது உங்களுக்குப்  புரியும். 

Monday, 6 January 2014

மதுரைக் கோட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு

மதுரையில் 04.01.14 அன்று NFPE மாநிலச் செயலர் தோழர் திரு. ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக் குழுவில் கீழ்க்காணும் மதுரைக் கோட்ட நிர்வாகிகள் ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

1. தோழர் திரு R. முருகேசன் (கோட்டத் தலைவர்
2. தோழர் திரு S. சுந்தரமூர்த்தி ( கோட்டச் செயலர்)
3. தோழர் திரு. K. நாராயணன் (கோட்ட நிதிச் செயலர்)

பொதுக் குழுவில் அனைத்து உறுப்பினர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு புது நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.




Friday, 1 November 2013

NFPE PIII MADURAI DIVISION IS WISHING COM V.RAJENDRAN FOR HIS PROSPEROUS RETIREMENT LIFE !!!


வாழ்த்துகிறோம் !

அஞ்சல் நான்கு மாநிலச் சங்கத்தின்  மாநிலச் செயலர் 
தோழர். V . ராஜேந்திரன் அவர்கள்  31.10.2013 அன்று  
அரசுப் பணி  நிறைவு பெறுகிறார் , 

அவர் எந்த நேரமும் அனைவரிடமும் முகச் சுணக்கம் இன்றி  சிரித்த முகத்துடன் இனிதே பழகும் பண்பாளர் . தலைவர்  A .G .P . அவர்களிடம் தொழிற் சங்கப் பாடம்  பயின்று , அவர் வழி நின்று  பல்வேறு சோதனைகளுக்கிடையே  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் பொறுப்பினை  ஏற்றவர். அவர் பொறுப்பேற்ற இரண்டு முறையும் சோதனைகள் தான். ஆனாலும் சோதனைகளை, சாதனைகளாக்கும் மன உறுதியை அவர் பெற்றிருந்தார்  என்பதாலேயே அவரது காலத்தில் அஞ்சல் நான்கு  தலை நிமிர்ந்தது . 

சுயமரியாதைக் கொள்கைகளுக்கு சொந்தக் காரார் . தொழிற்சங்கத்தில் நேர்மையாளர். இப்படி பல பரிமாணங்களைப் பெற்றிட்ட 

                      தோழர். V . ராஜேந்திரன் அவர்கள் 

அரசுப் பணி  நிறைவு பெறும்  நாளில்  அவர் எல்லா நலன்களும் , வளமும் பெற்று  நீடு வாழ, மதுரை அஞ்சல் மூன்று கோட்டமும், தமிழக அஞ்சல் மூன்று சங்கமும்,  தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழுவும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் நாடு கிளையும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை  பதிவு செய்கின்றன . 

அவர்தம் தொழிற் சங்கப்  பணி  தொடரட்டும் !

Tuesday, 29 October 2013

OUR HEARTIEST GREETINGS TO THE NEW CIRCLE SECRETARY OF TAMILNADU CIRCLE NFPE - P 4 UNION

நமது அன்பிற்கும்  மதிப்பிற்கும் உரிய 

தோழர் கோபு கோவிந்தராஜன் 
( அகில இந்திய அமைப்புச் செயலர் - தென் சென்னை கோட்டம்) அவர்கள் தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயலாளராக   தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 

          கடந்த 24.06.2013-ல் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் அஞ்சல் நான்கின்  அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் கோபு.கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

          அதே போன்று காலியாக இருந்த மாநில அமைப்பு செயலாளர் பதவிக்கு திருச்சி கோட்ட செயலாளர் தோழர் S.கோவிந்தராஜன் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவ்விரு நிர்வாகிகளின் பணி  சிறக்க  தமிழக அஞ்சல் மூன்று, தமிழக அஞ்சல் RMS  இணைப்புக் குழு மற்றும்  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

சால்வை பெறுபவர் : தோழர் . கோபு கோவிந்தராஜன்  

 

ALL INDIA POSTAL STENOGRAPHERS' ASSOCIATION GENERAL SECRETARY FROM TAMILNADU

ALL INDIA POSTAL STENOGRAPHERS’ ASSOCIATION VIII ALL INDIA CONFERENCE held at VIVEKANANDA KENDRA, VIVEKANANDAPURAM, KANYAKUMARI –Tamilnadu On 25/26 OCTOBER 2013 

The following  is the new team of office bearers elected unanimously :-

Shri. J.J.Singh, President, ( Hariyana )

Shri. E. Murugadas, General Secretary, (Madurai – Tamilnadu)

Shri. Anil Singh, Treasurer ( Bihar )

Shri. K. Suresh kumar, A.G.S, Tamilnadu.

போட்டியின்றி பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப் பட்ட 
தோழர்.  E . முருகதாஸ் அவர்களின்   பணி  சிறக்க அஞ்சல் மூன்றின் அன்பான வாழ்த்துக்கள் !


Friday, 28 June 2013

சமீபத்திய கோட்ட மாநாடுகள் - புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பொள்ளாச்சி கோட்டமாநாடு :-

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று பொள்ளாச்சி கோட்டத்தின்  36 வது  கோட்ட மாநாடு பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள TELC  பள்ளியில் 23.06.2013  அன்று சிறப்பாக நடைபெற்றது


.கோட்டத்தலைவர் தோழர் K. ஜெயராஜ்  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .D.எபினேசர் காந்தி மாநில துணைத்தலைவர் ,தோழர் C.சஞ்சீவி கோவை மண்டல செயலர் ஆகியோர்  மாநில சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நடப்பு ஈராண்டிற்கான  நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .

தலைவர்                       :தோழர் K ஜெயராஜ் 


செயலாளர்                   :தோழர் R.அய்யாசாமி 

நிதிச் செயலாளர்        :தோழர் A.ஹாரூன் பாஷா 



 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



அண்ணா சாலை  கிளை மாநாடு :-


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று அண்ணா சாலை கிளையின்  மாநாடு  26.06.2013  அன்று  அண்ணா சாலை தலைமை  அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  தோழர்K.K.லோகய்யா  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க நம்முடைய முன்னாள்   பொதுசெயலாளர் தோழர் K.V.ஸ்ரீதரன்  அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள  தோழர் J . ஸ்ரீ வெங்கடேஷ்  மாநில தலைவர், ,தோழர் J.ராமமூர்த்தி ,மாநில செயலாளர் ,தோழர் A.வீரமணி மாநில நிதிச் செயலாளர் ,தோழர் .S .K .ஜேக்கப் ராஜ்  மாநில உதவி செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள்   கலந்து கொண்டனர். 

நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் நடப்பு ஈராண்டிற்கான   நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .


தலைவர்                       :தோழர்.E.K. தாமஸ் 


செயலாளர்                   :தோழர்.S.வெங்கடேசன் 

நிதிச் செயலாளர்        :தோழர்.ஜெயவேலு

   
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


மதுரை  கோட்ட மாநாடு :-


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று மதுரை கோட்ட   மாநாடு 26.06.2013  அன்று  மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.  கோட்டச் சங்கத் தலைவர் தோழர் R.தமிழ்செல்வன்    அவர்கள்  தலைமை தாங்கி நடத்தி கொடுக்க முன்னாள் மாநிலச் செயலர்  தோழர் .S.சுந்தரமூர்த்தி   அவர்கள்கலந்து கொண்ட மாநாட்டில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .



தலைவர்                       :தோழர்.R.தமிழ்ச்செல்வன் 


செயலாளர்                   :தோழர்.R .முருகேசன் 

நிதிச் செயலாளர்        :தோழர். K.நாராயணன்  

Sunday, 9 June 2013

36வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல்

The 36th All India Postal Employees Union Group “C” Circle conference of our union was held from 05.06.2013 to 08.06.2013 at Sree Kanchi sankara Mahal, Kumbakonam 

The following office bearers were elected unanimously for the ensuing term

President            : Com. J. Srivenkatesh, 
                                                         Chennai city North Dn

Vice Presidents : Com. V.Venkataraman, 
                                                         Chennai city South Dn
                             Com. D. Ebenezer Gandhi, 
                                                         Coimbatore Dn
                             Com. J. Janakiraman, 
                                                         Trichy Dn

Secretary          : Com. J. Ramamurthy, 
                                                         Chennai city Central Dn

Asst. Secretary : Com. R. Kumar, 
                                                         Pudukotai Dn
                             Com. S. Veeran, 
                                                        Vellore Dn
                             Com. R.V.Thiagarajapandian, 
                                                        Ambasamudram Br.

Tuesday, 7 May 2013

COM. M. KRISHNAN GOT ELECTED AS NEW SECRETARY GENERAL OF CONFEDERATION




' THE MIGHTY WARRIOR '
 HAS GOT THE HIGHEST JOB


' THIS IS THE FIRST TIME IN HISTORY SINCE THE FORMATION OF CONFEDERATION '

OUR HEARTIEST CONGRATS TO OUR
BELOVED LEADER COM. M. KRISHNAN

கடந்த 04.05.2013 முதல் 06.05.2013 வரை கொல்கத்தா மாநகரில் நடைபெற்ற மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  24 ஆவது தேசிய மாநாட்டில்  நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரும், NFPE  சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும் ஆகிய தொழிற் சங்கப் போராளி தோழர் . M . கிருஷ்ணன்  அவர்கள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச்  செயலராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்  என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . 


1966 இல் துவங்கப்பட்ட மகா சம்மேளன அமைப்பிற்கு நமது NFPTE/NFPE   பேரியக்கத்திலிருந்து  மாபொதுச்  செயலர் பொறுப்பு பெறுவது இதுவே முதல் முறை . தொழிற் சங்க வரலாற்றில் இது ஒரு மைல் கல்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் என்பது மத்திய அரசுத் துறையில் இயங்கி வரும் 106 சங்கங்களை உள்ளடக்கியது. 13 லட்சம்  ஊழியர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் .

Monday, 25 June 2012

Next officiating General Secretary took charge at CWC Vellore

Dear Comrades....
New officiating General Secretary elected. NFPE MADURAI WISHING HIM ALL SUCCESS

                   The Central Working Committee held at Vellore, Authorizes Com. Sivanarayana Deputy General Secretary to officiate as General Secretary till the next AIC.               

Sunday, 3 June 2012

A MAN FIT FOR THE JOB AND THE JOB FIT FOR THE MAN- THY NAME IS GREAT KVS




பூவிதழின் மென்மை யினும்  
மென்மையான  அன்பு உள்ளம் !
அரவணைக்கும் அன்னை உள்ளம் !
எம் தலைவன் உள்ளம் !

விழி மலர்கள் வேலாகும் வாளாகும் !
தீங்கொன்று  சங்கத்திற்கு வந்திட்டால் !
கால் மலர்கள் வாடிடினும்
அவர் கடும் பயணம் நிற்காது !

கை மலர்கள் பிணைத்து நிற்கும்
தம்பியரை சங்கத்தை !
அம்மலரே எதிரிகளை
மன்னித்து  நெற்கதிர் போல்
தலை நாணச் செய்துவிடும் !

பேரறிஞர் அண்ணாவுக்கு
அவர் தம்பி எழுதியது போல
அறிவு ஜீவி KVS க்கு 
அவர் தம்பிமார்  எழுதியது இது !

மூன்றெழுத்தில்  ஒரு சிறப்புண்டு !
அதில் முத்தமிழ் மண முண்டு !
மூவேந்தர் முக் கொடி  முக்கனி என
மும்முரசு ஆர்த்தவர் தமிழர் !

அவர் வாழ்ந்த தமிழ் வாழ்வுக்கு  மூன்றெழுத்து !
அந்த வாழ்வுக்கு அடிப்படையாம்
அன்புக்கு மூன்றெழுத்து !
அன்புக்கு துணை நிற்கும்
அறிவுக்கு மூன்றெழுத்து !

அறிவார்ந்தோர்  இடையில் எழும்
காதலுக்கு மூன்றெழுத்து !
காதலர் போற்றுகின்ற  கடும்
வீரமோ மூன்றெழுத்து !

வீரம் மிக்கோர் காணுகின்ற
களம்  மூன்றெழுத்து !
களம் சென்று காணுகின்ற
வெற்றி மூன்றெழுத்து !

அந்த வெற்றிக்கு நமைஎல்லாம்
இட்டுச் செல்லும்  
அறிவு ஜீவி எம் தலைவன்
KVS   மூன்றெழுத்து !

 
வெறும் உச்சியில் 
இருப்பதல்ல  தலைமைப் பண்பு !
சங்கத்தின் ரத்த நாளங்களோடு   
பின்னிப் பிணைந்ததே உந்தன்   
தலைமைப் பண்பு !
 
அரசுப்   பணி நிறைவுற்றால்  என்ன ?
அடுத்த  பணி உனக்கிருக்கு !
அடுத்த  தலைமுறை  வளர்ப்பாய் நீ !
சங்க வேராக  இருப்பாய்  நீ !

நீவிர்  வாழ்க  பல்லாண்டு!  வளர்க நாளும் உம் தொண்டு !

Courtesy : http://aipeup3tn.blogspot.in/