வீரமிகு தோழர்களே ! தோழியர்களே !! வணக்கம்.
அஞ்சல் துறைப் பணிகளை சீரமைக்க ஆலோசனை வழங்க இலாக்காவால் மெக்கன்சி கன்சல்டன்சி என்னும் அமெரிக்க நிறுவனம் அமர்த்தப்பட்டது. ஆனால் அந்த நிறுவனமோ பல நாடுகளிலும் நல்ல லாபத்தில் இயங்கிய பல கம்பெனிகளை தங்களது அபத்தமான ஆலோசனைகளால் நட்டத்தில் ஆழ்த்தி மூடுவிழாவும் நடத்திய நிறுவனம் ஆகும்.இந்த நிறுவனத்தை நமது துறைக்கு ஆலோசனை வழங்குவதற்கு ரூ.100 கோடிக்கு கட்டணம் கொடுத்து 2 ஆண்டுகளுக்கு முன் நியமித்தது. ஆனால் நிலைமை தாறுமாறாக மாறுவதைஉணர்ந்து கொண்ட நமது இலாக்கா M N O P –L1,L2 பிரிப்பக முறையை கைவிட்டு முந்தைய முறையில் இனி அஞ்சல் பிரிப்பகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. ஒன்றுபட்ட நமது போராட்டத்தின் வெற்றி இது ஆகும்.
அடுத்த தாக்குதலாக நமது மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் மசோதா திட்டம் இன்று 2.9.2013 திங்கள்கிழமை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் படி மத்திய அரசு பணியில் 2004 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசு தன் பங்காக ஒரு தொகையை செலுத்தி அப்பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை பிரித்து கொடுக்கும் அபத்தமான திட்டத்தை நடைமுறை படுத்த முயலுகிறது. இதை அணைத்து மத்தியஅரசு ஊழியர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறது. இத்திட்டம் நிறைவேறினால் அடுத்து பென்ஷன் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர் அனைவருக்கும் நீட்டிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்து வருகிறது. எனவே பாராளுமன்றத்தில் இத்திட்டம் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 3.9.2013 அன்று அணைத்து மத்திய அரசு அலுவலகம் முன்பும் மாபெரும் ஆர்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதின்
அடிப்படையில் நமது N F P E சம்மேளனமும் அணைத்து தலைமை அஞ்சலகம் மற்றும் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. அதன் படி நமது மதுரைக் கோட்டத்தில் தல்லாகுலம் தலைமை அஞ்சலகம் முன்பு 3.9.2013 மாலை 6.00 மணிக்கு அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE) தலைவர்களின் கூட்டு தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைத்து பகுதி தோழர்களும் /தோழியர்களும் முக்கியமாக 2004 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் சிறப்பாய் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் சிலதுளிகளை கீழே பகிர்ந்துள்ளோம்
ஒன்று படுவோம் போராடுவோம் வெற்றிபெறுவோம்
தோழமையுடன் .
NFPE அஞ்சல் மூன்று, நான்கு, GDS தோழர்கள் மதுரைக் கோட்டம்.
No comments:
Post a Comment