அன்புத் தோழர்களே தோழியர்களே......
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே.....
-பார் புகழ் கவிஞன் பாரதி
18.10.12 அன்று, மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்திற்கு, அனைத்து மாநில செயலர்களூம், பங்கு பெறும் சிறப்பு போராட்ட பொதுக்குழு விளக்கக் கூட்டம் மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 12.10.12 மாலை 6 மணியளவில் நடைபெறவிருப்பதால் மதுரை தென் மண்டலத்தைச் சார்ந்த அனைத்து அஞ்சல் தோழர்களும், தவறாமல் கலந்து கொண்டு மூன்று அம்சக் கோரிக்கையினை வென்று எடுக்க போராட்டக் களத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது...
இப்படிக்கு,
Joint Council Association
K.நாராயணன்
மதுரை தென் மண்டல NFPE செயலர்.
No comments:
Post a Comment