Showing posts with label Union subjects. Show all posts
Showing posts with label Union subjects. Show all posts

Wednesday, 29 October 2014

Trade unions to hold joint protest against labour laws reforms


New Delhi: All central trade unions will hold a nationwide stir on December 5 to protest against the labour reforms initiated by the Narendra Modi government.

"Protest rallies will be taken out in all state capitals and in Delhi as the proposed reforms are against the interest of the working class," general secretary of All India Trade Union Congress (AITUC) Gurudas Dasgupta said.
    
"The reforms are pro-corporate and anti-worker. The reforms will give rise to low wages and negligible security cover to the workers. A worker can be hired at will and thrown out," he said.

Friday, 23 May 2014

STAY ORDERS OBTAINED BY DIVL. SEC, AGAINST THE IRREGULAR RT ORDERS OF SPOS., SALEM WEST

முறைகேடான சுழல் மாறுதல் உத்தரவுக்கு நீதிமன்ற இடைக்கால தடை !


சேலம் மேற்கு கோட்டத்தில்  இலாக்கா விதிகளை மீறி, சுழல் மாறுதல் செய்வதற்கான இலாக்காவின்  வழி காட்டு நெறிமுறைகளை மீறி ,  தன்னிச்சையாகவும் , தான் தோன்றித்தனமாகவும் INTEREST OF SERVICE என்ற பெயரில் 15 தோழர்/ தோழியர்களுக்கு  சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரால் அளிக்கப் பட்ட இட மாறுதல் உத்திரவை எதிர்த்து , 

சேலம் மேற்கு அஞ்சல் மூன்று கோட்டச் செயலரும் , 
நமது மாநிலச் சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலருமான 
தோழர். C. சஞ்சீவி அவர்களால்  

சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் தொடரப் பட்ட வழக்கில்  இன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது என்பதை  தோழர். சஞ்சீவி அவர்கள் தெரிவித்துள்ளார். 

Thursday, 9 January 2014

போராட்டக் களமாகிறது மதுரை - நாள் 10.01.14 காலை 0930 மணியளவில் மதுரை மண்டலம் முன்பு

தமிழ் மாநில NFPE பேரியக்கத்தின், அஞ்சல் மூன்று - அஞ்சல் நான்கு - GDS சங்கங்கள் - RMS - MMS ஆகிய அனைத்து சங்கங்களும் ஓரணியாகத் திரண்டு, மதுரை மண்டலத்தில் நடைபெறும் காட்டாட்சியை முடிவிற்குக் கொண்டு வர நாளை 10.01.14 அன்று காலை 0930 மணியளவில் தொடர் முழக்கப் போராட்டத்தினை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதுரைக் கோட்டத்திற்கென கீழ்க்காணும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் வரை மாநிலச் சங்கத்தின் ஆணைக்கு இணங்க தொடர் போராட்டங்கள் நடத்த மதுரை மண்டலத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களும் தங்களால் முடிந்த வரை விடுப்பு எடுத்துக் கொண்டு காலந்தவறாமல் 10.01.14 அன்று காலை 0930 மணிக்கு  மதுரை தென் மண்டலத்தின் வாயிலில் கூடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்




Monday, 6 January 2014

தொடர் முழக்கப் போராட்டம்! பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !!

அன்புத் தோழர்களே... தோழியர்களே....

               தென் மண்டலத்தில் நடக்கும் காட்டாட்சியை எதிர்த்தும், இரு மாதப் பேட்டிகளை சடங்காக நடத்திடும் போக்கினை கண்டித்தும், இலாக்கா உத்தரவுகளை குப்பையில் போட்டு, ஊழியர் விரோதப் போக்கினை கையாளும் கொடுங்கோல் ஆட்சியினைக் கண்டித்தும், பலமுறை மண்டல நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை அளித்தும், செவிமடுக்காமல், சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து வரும் ஊழியர்களை காக்க 10.01.14 அன்று காலை 10 மணி முதல் மாபெரும் அளவில் தொடர் முழக்கப் போராட்டத்தினை தென் மண்டல அலுவலக வாயிலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

         05.01.14 நடைபெற்ற RMS, P3, P4, GDS கோட்ட கிளைச் செயலர்களின் கூட்டத்தின்போதும், போராட்ட உணர்வோடு, ஊழியர்களைக் காக்க, நேரந் தவறாமல், சரியாக 10 மணியளவில், தென் மண்டல அலுவலக வாயிலில், மண்டலந்தோறும் ஊழியர்களைத் திரட்டி போராட்டத்தினை புரட்சிகரமாகவும், வெற்றி பெறவும் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

       பெருந்திரளாக திரள்வீர்..... உரிமைகளை வென்றெடுப்பீர்....

அஞ்சல் மூன்று இணைப்புக் குழுவின் சுற்றறிக்கை இதோ....







Saturday, 4 January 2014

TN CIRCLE NFPE CO-ORDINATION COMMITTEE MEETING/SOUTHERN REGN. DIVL/BRANCH SECS. MTG ON 05.01.2014 AT MADURAI

அன்புத் தோழர்களுக்கு  இனிய வணக்கமும் 
பொங்கல் நல் வாழ்த்துக்களும் ! 

ஏற்கனவே தென் மண்டலத்தில் தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள்  குறித்தும் , மண்டல  மற்றும் கோட்ட அதிகாரிகளின் அடக்கு முறைகள் குறித்தும்  நமது  தமிழக அஞ்சல் -RMS  இணைப்புக் குழுவின் சார்பாக  மண்டல அதிகாரி அவர்களிடம்  கோரிக்கை மனு அளித்து கடந்த 03.09.2013 அன்று   நாம் பேச்சு வார்த்தை நடத்தியதும் அதன் விளைவாக சில பிரச்சினைகள் தீர்க்கப் பட்டதும் ,  நமது கோரிக்கை மனுவிற்கு  எழுத்துபூர்வமாக பதில் பெற்றதும் , அதில் பல பிரச்சினைகள் தீர்க்கப் படாமல் மழுப்பலான பதிலாக அளிக்கப் பட்டிருந்ததும்  தென் மண்டலத்தில் உள்ள  அனைத்து அஞ்சல் - RMS  பகுதி நிர்வாகிகளுக்கும் ,  கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் நன்கு தெரியும். 

அளிக்கப் பட்ட பதிலின் நகல் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பப் பட்டிருந்ததும் நினைவில் இருக்கும் .

செப்டம்பர் திங்கள் பேச்சு வார்த்தைக்குப் பிறகு 03.09.2013 அன்று மாலை  நடைபெற்ற கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில்  நமது  அறிவிக்கப் பட்ட போராட்டம்  ஒத்தி வைக்கப் பட்டதாக  நல்லெண்ண அடிப்படையில் ஏகமனதாக முடிவெடுக்கப் பட்டதும் நினைவில் இருக்கும்.

மாறாக , தற்போது  தென் மண்டலத்தில்  நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்பதை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாதாரண தோழர்கள் முதல் , கோட்ட/ கிளைச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளின்  கோபக் குரல்= கூக்குரல்  மூலம் நம்மால் நன்கு உணர முடிகிறது. 

Monday, 23 September 2013

HIGHER RATE OF HRA AND TRANSPORT ALLOWANCE FROM 01.03.2011 BASED ON CENSUS 2011 REPORT

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

நேற்றைய தேதியில் உயர் வீட்டு வாடகைப் படி பெறுவதற்கான நம் மாநிலச் சங்கத்தின் முயற்சி குறித்தும் அதன் மீது நம் அகில இந்திய சங்கத்தின் செயல் பாடு குறித்தும் , இதன் காரணமாக DIRECTORATE  இல் இருந்து அனைத்து CPMG மற்றும் GM  FINANCE  க்கு அனுப்பப் பட்டுள்ள கடித்தத்தின் நகல் குறித்தும் தெளிவாக  தெரிவித்திருந்தோம். 

எனவே  இது குறித்து கோட்ட/ கிளைச் செயலர்கள் உடனடியாக விரைந்து செயல்பட கேட்டுக் கொண்டிருந்தோம். 

தற்போது  CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் எந்த எந்த பகுதிகள்  URBAN AGGLOMERATION  பகுதியாக உயர் வீட்டு வாடகைப்படி அறிவிக்கப் பட்ட பெரு  நகரங்களை சார்ந்து வருகிறது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என்றும்,  இதன் மேல் விபரங்கள் புரியவில்லை என்றும்  பல செயலர்கள் தெரிவித்தார்கள் .அது குறித்து சில விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள மாநிலச் சங்கம் விரும்புகிறது.

Friday, 20 September 2013

A SUCCESS TO OUR CIRCLE UNION EFFORTS IN GRANTING HRA IN CONSONANCE WITH CENSUS 2011 FIGURE

மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு மாபெரும் வெற்றி ! இந்திய முழுமைக்கும் நாம் எடுத்த பிரச்சினை  வழி ஏற்படுத்தப்போகிறது !

இந்தப் பிரச்சினையில் முழு கவனம் செலுத்திய
 நமது பொதுச் செயலர் 
தோழர்  கிருஷ்ணன், முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS , 
நமது துணைப் பொதுச் செயலர் தோழர்.  N.S. ஆகியோருக்கு 
நம் மாநிலச் சங்கத்தின்  நன்றி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

கடந்த 24.07.2012 இல் நடைபெற்ற நமது மாநில கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் (RJCM )  நம்மால் எடுக்கப் பட்ட பிரச்சினை ,  CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் URBAN  AGGLOMERATION  ஆக அறிவிக்கப்பட்டும் அல்லது மக்கள் தொகை உயர்ந்தும் உள்ள  நகர விரிவாக்கப் பகுதிகளுக்கு அல்லது   பெருநகரப் பகுதிகளுக்கு  உயர் வீட்டு வாடகைப்படி  வழங்கப் பட வேண்டும் என்பதே .  RJCM  MINUTES  நகலை கீழே பார்க்கவும் . SL . 19  ITEM 31 இல் நமது SUBJECT  இக்கு ,  ' IT IS A SUBJECT MATTER TO BE DECIDED AT DIRECTORATE LEVEL'  என்று நமது  CPMG  பதில் அளித்துள்ளார். CENSUS  புள்ளி விபர அடிப்படியிலேயே  உயர் வீட்டு வாடகைப் படி வழங்கலாம் என்று  நாம் வலியுறுத்தியிருந்தோம்.

CPMG  அவர்கள் இந்த பிரச்சினையை தீர்க்காது போனதால்  உடன் இந்த பிரச்சினை குறித்து நமது அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

கடந்த 17.06.2013 அன்று  JCM  இலாக்கா குழு கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்பிட நாம்  SUBJECT  அனுப்பியிருந்தோம் . அதன் நகலையும் 17.06.2013 அன்றே  நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம். அதன் நகலை கீழே  பார்க்கவும் .

இதன் அடிப்படையில் கடந்த 17.07.2013 அன்று நமது பொதுச் செயலரால் இந்த பிரச்சினை   நமது துறை முதல்வருக்கு எடுத்துச் செல்லப் பட்டது . தற்போது  இலாக்காவில் இருந்து  இந்தியாவில்  உள்ள அனைத்து CPMG  மற்றும் GM  FINANCE  களுக்கு  CENSUS  2011 அடிப்படையில்  URBAN  AGGLOMERATION  ஆக அறிவிக்கப் பட்டும் ,  மக்கள் தொகை உயர்வாலும்  உள்ள  பகுதிகளை கண்டறிந்து ,

Wednesday, 4 September 2013

தென் மண்டல PMG யுடன் பேச்சு வார்த்தை ! கால அவகாசம் கருதி நமது போராட்டம் ஒத்தி வைப்பு !!!

கடந்த 10.08.2013 அன்று மதுரையில் நடைபெற்ற  தென்மண்டல  கோட்ட/ கிளைச்  செயலர்கள்  கூட்டத்தில்  எடுக்கப் பட்ட முடிவின் அடிப்படையில் ,  நமது முழு வீச்சிலான நடவடிக்கை !

 30 பக்க கோரிக்கை மனு தயாரிப்பு ! PMG , SR  உடன் சந்திப்பு ! பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் !

தென் மண்டலத்தில் தானடித்த மூப்பாக செயல்பட்டு  ஊழியர்களை சொல்லொணாத்  துயரத்தில் ஆட்படுத்தி வந்த  தென் மண்டல இயக்குனர் அவர்களின் பல்வேறு தொழிலாளர் விரோத  நடவடிக்கைகளை தோலுரித்து காட்டும்  பட்டியல்  நமது கோரிக்கை மனுவின்  முதல் பகுதியாகவும் ,  அஞ்சல் மூன்று, RMS  3 ,  RMS  4, GDS  உள்ளிட்ட அனைத்து கோட்ட / கிளை பிரச்சினைகளையும்  பட்டியல் இட்டு இரண்டாவது பகுதியாகவும்   தயாரிக்கப் பட்டது.   மனுவுடன்  நாம் பட்டியல் இட்ட பல கோரிக்கைகளுக்கு ஆதரவு ஆவணங்களும்  இணைக்கப் பட்டது . அஞ்சல் மூன்றின் முன் முயற்சியால்  COC  இயக்கமாக  மாற்றப்பட்டு , RMS மற்றும்  GDS  கோரிக்கைகளும்  அந்தந்த மாநிலச் சங்கங்கள் மூலம் பெறப்பட்டு  இணைக்கப் பட்டது .

நமது  செயலாக்கத்திற்கு  கிடைத்த முன்னேற்றம் !

நமது வலைத்தளத்தில் நாம் வெளியிட்ட  நமது  செயலாக்கம் குறித்த பதிவுகளும் , PMG, SR க்கு  நாம் 24.08.2013 அன்று  அனுப்பிய  கடிதமும் நிர்வாகத்தை தட்டி எழுப்பின .  பாரா முகமாக இருந்து ,  தேங்கிக் கிடந்த கோரிக்கைகளின் தீர்வுக்கு வழி செய்யாமல்  கிடப்பில் போட்டிருந்த நிர்வாகம்  முடுக்கி விடப்பட்டு  03.09.13 அன்று  மதியம் மூன்று மணிக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.நிர்வாகத்திடம்  DPS அவர்களின்   ஊழியர் விரோத நடவடிக்கைகளை  நேர் காணலில்    தெள்ளத் தெளிவாக எடுத்து வைத்தோம்.

 நேர்காணலுக்கு   முன்பாகவே  
நிர்வாகத்தின் நடவடிக்கைகள் துவக்கம் ! 

Saturday, 24 August 2013

CIRCLE UNION STRUGGLE PROGRAMME AT SOUTHERN REGION

போராட்டத் தீ பரவட்டும் !

OOOOOOOOOOOO 

 தென் மண்டல (பொறுப்பு)  இயக்குனரின் அடாவடிச் செயல்கள்  மற்றும் ஊழியர் விரோதப்  போக்கினைக் கண்டித்தும் ,

 தென் மண்டலத்தில் மலை போல தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும், 

பலமுறை பேசியும் எழுதியும்  இவற்றையெல்லாம்  தட்டிக் கேட்க வேண்டிய  மண்டல நிர்வாகம்  தனக்கென்ன என்ற ஏனோ தானோ மனோ பாவத்தில் இருப்பதைக் கண்டித்தும்  

தென் மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோட்ட/ கிளைகளிலும் எதிர்வரும் 04.09.2013 அன்று மாலை  கோட்ட/ மற்றும் தலைமை அஞ்சலகம் முன்பாக  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

அதே நேரத்தில் மதுரை மண்டல அலுவலகம் முன்பாக மாநிலத்  தலைவர், மாநிலச் செயலர் , மண்டலச்   செயலர்   கலந்து கொள்ளும்  கண்டன ஆர்ப்பாட்டம்   -  மற்றும்  தென் மண்டல அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தல் !

OOOOOOOOOOOOOO 

அன்புத் தோழர்களே ! கடந்த 10.08.2013 அன்று   மதுரையில் நடைபெற்ற தென்மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவின் படி தென் மண்டல (பொறுப்பு)  இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும்,   தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைத்  தீர்க்கக் கோரியும், முதற் கட்டமாக   கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி தென்  மண்டல   PMG அவர்களிடம்கோரிக்கை  மனு அளிப்பதென்றும், அதே நேரத்தில்  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளிலும் அவரவர் பகுதியில் உள்ள கோட்ட/ தலைமை அஞ்சலக வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தியும்  தென் மண்டல  (பொறுப்பு ) இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும்  கண்டன ஆர்பாட்டம் நடத்துவதெனவும்  முடிவு எடுக்கப் பட்டது தெரிந்ததே .   

Thursday, 8 August 2013

TWO HOURS WALK OUT ON THE DAY OF TAKING UP THE PFRDA BILL IN PARLIAMENT

WITHDRAW CONTRIBUTORY PENSION SCHEME

SCRAP PFRDA BILL

PFRDA BILL LISTED IN THE AGENDA OF THE CURRENT SESSION OF THE PARLIAMENT

CONFEDERATION CALLS UPON THE CENTRAL GOVERNMENT EMPLOYEES TO ORGANIZE TWO HOURS WALK-OUT PROGRAMME ON THE DAY WHEN THE BILL IS
TAKEN UP FOR DISCUSSION
IN PARLIAMENT


As you are aware, Central Government is going ahead with their agenda on pension privatization. The controversial PFRDA Bill (Pension Fund Regulatory and Development Authority Bill) is listed as an agenda item for the current Parliament session. The bill may be taken up for discussion in Parliament on any day. Confederation of Central Government Employees & Workers has opposed the Contributory Pension Scheme and also the PFRDA Bill from the very beginning.

Tuesday, 16 July 2013

LOCAL STRUGGLE IN RMS CB DIVISION, TAMILNADU CIRCLE.

For the past 5 years to manage the sorting asst vacant places in mail offices nearly 130 to 140 outsiders having +2 qualifications and above are working in all units of RMS CB Dn for sorting unregd articles and sometimes in regd branches also. They are working on hourly rate fixed by Dist collectors. This is a meagre amount  [Rs.36/-per hour].  Ignoring the prevailing ground realities, Western regional administration all of a sudden abruptly terminated the services of outsiders on 26.6.13 which resulted in accumulation of mails in heaps in front of mail offices. JCA immediately convened and decided to conduct TU programme by arranging gate meetings, demonstrations insisting the administration to withdraw the order and restore normalcy. The programme which JCA conducted were published in daily newspapers. In this background Circle Secretary Com. K. Sankaran R3, J.Ramamoorthi Circle Secretary P3 met PMG MM at Chennai on 28.6.13 and appraised the situation and requested to restore statusquo so as to facilitate to clear the pending mails. 

      On the part of outsiders they were well determined and very strong .In this background administration withdraw the termination order and permitted all outsiders for sorting and they were also now performing duties as earlier

Thursday, 30 May 2013

INFORMAL MEETING WITH PMG(SR) ON 30.05.13 AT 1230HRS BY K.NARAYANAN REGIONAL SECRETARY

Problems discussed
      1. Cancellation of transfer orders issued by then SSPOs, Madurai 

     2. Transfer case of Shri. K. Kalimuthu PM Gr I from Vadipatti to madurai city limits

     3. Immunity transfer case of divisional secretary salem west

     4. Restoration of dormatery facility for lady trainees at madurai HPO

     5. Late receipts of mails by the madurai town sos

Positive response from the PMG(SR)

      1. DORMATERY FACILITY RESTORED TO THE LADY TRAINEES. THANKS TO THE DIVISIONAL SECRETARY KANIYAKUMARI FOR HAVING BROUGHT TO MY NOTICE.

2. PMG ASSURED TO SETTLE THE ALL ABOVE ISSUES FAVORABLY.

3. THANKS TO PMG