Showing posts with label Demonstration. Show all posts
Showing posts with label Demonstration. Show all posts

Saturday, 30 August 2014

PHOTOS OF DEMONSTRATIONS BY JCA HELD AT VARIOUS PARTS OF TAMILNADU ON 28.08.2014

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! கடந்த 28.08.2014 அன்று CENTRAL  JCA  அழைப்பின் கீழ் தமிழகத்தில்  JCA (NFPE & FNPO )வின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  பல இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

சென்னையில் NFPE  COC  இன் கன்வீனர் தோழர். J . ராமமுர்த்தி அவர்கள் தலைமையிலும் FNPO COC  கன்வீனர் தோழர். P . குமார் அவர்கள் முன்னிலையிலும்  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்  CHIEF  PMG அலுவலகம் முன்பாக நடைபெற்றது . NFPE  , FNPO  மற்றும் PEPU சங்கத்தின் மாநிலச் செயலர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.  FNPO  சார்பில் அதன்  மாபொதுச் செயலர் தோழர். தியாகராஜன் அவர்களும்  NFPE  சார்பில் அஞ்சல் மூன்றின் (CHQ ) செயல் தலைவர் தோழர். N . கோபாலகிருஷ்ணன் அவர்களும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். FNPO  R 4  மாநிலச் செயலர்  தோழர். ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது. 

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமும்,  புது டெல்லியில் இதே நாளில் நம்முடைய கோரிக்கை மனுவை இலாக்கா உயர் அதிகாரிகளிடம்  நம்முடைய தலைவர்கள் அளிக்கும் புகைப்படமும் ,  மற்றும் பல்வேறு கோட்டங்களில்  சிறப்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம்.

CHENNAI 

Thursday, 19 June 2014

DEMONSTRATION AGAINST ANTI LABOUR SOUTHERN REGIONAL ADMINISTRATION - COC PROGRAMME ON 13.6.2014

தென் மண்டல நிர்வாகத்தின், சட்ட விரோத ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக  தென் மண்டலத்தின்  கோட்டங்களில்  13.06.2014 அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன . இது நம் போராட்டத்தின் ஒரு பகுதியாகும் . மாநிலம் தழுவிய எதிர்வரும் போராட்டத்தின் ஒரு முன்னோட்டமே ! கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு மாநிலச் சங்கங்களின் வாழ்த்துக்கள் ! சில கோட்டங்களில் இருந்து  அனுப்பப்பட்ட   புகைப் படங்களின்  ஒரு பகுதி கீழே பார்க்கவும்.

Wednesday, 2 April 2014

கோவை மண்டல பெருந்திரள் மனு அளிப்பு போராட்டம் வெற்றி !

கோவை கோட்ட NFPE  மற்றும் FNPO  சேர்ந்த JCA  சார்பாக மண்டல அதிகாரியிடம் குறை தீர் மனு அளிப்பு  போராட்டம் நடத்துவதாக முதலில் அறிவிக்கப் பட்டிருந்தது . பின்னர்  நம்முடைய அஞ்சல்  மூன்று மண்டலச் செயலர் தோழர் சஞ்சீவி அவர்களால் அந்தப் போராட்டம்  மண்டல அளவிலான போராட்டமாக மாற்றப் பட்டது 


கடந்த 28.03.2014 வெள்ளி மாலை  சுமார் 05.00மணியளவில் இந்தப் போராட்டம் மேற்கு மண்டல  அலுவலகம் வாயிலில் துவங்கியது . 

முக்கிய கோரிக்கைகளாக

Saturday, 11 January 2014

DHINA THANTHI NEWS DATED 11.01.14

SERIOUS AGITATION DHARNA PROGRAM AGAINST SOUTHERN REGIONAL LEVEL ADMINISTRATION IS CAPTURED BY THE MEDIA AND PUBLISHED IN DHINA THANTHI NEWS PAPER.


போராட்டத் தீ மதுரை மண்டலம் எங்கும் பரவுகிறது !!!! தொழிற்சங்கம் தோற்றதில்லை !!!!

அன்புத் தோழர்களே... தோழியர்களே...

                 தென் மண்டல நிர்வாகத்தின் அராஜகப் போக்கினைக் கண்டித்து,  தமிழ் மாநிலச் செயலர்கள் மற்றும் இணைப்புக் குழுவின் அறை கூவலுக்கிணங்க, தென் மண்டலத்தில் 10.01.14 அன்று, தொடர் முழக்கப் போராட்டத்தில் பெண் தோழியர்கள் உட்பட சுமார் 500, எழுச்சி மிகு தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு, தென் மண்டல நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பரித்த கோஷங்கள் விண்ணை முட்டின. திரள் கூட்டத்தினைக் கண்டு தென் மண்டலமே ஆடிப் போனது.

                காலை 0900 மணி முதல், காவல் துறை நண்பர்கள் மூலமாகவும், வாயில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே நுழைய விடாமல், போராட்டத்தை முறியடிக்க செய்யப்பட்ட சூழ்ச்சிகள் அனைத்தும் தவிடு பொடியாகின.

               மீண்டும் ஒட்டு மொத்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. அந்த கோரிக்கைகள் தவிர்த்த மாதாந்திரப் பேட்டிக்கு, தென் மண்டலத்தால் அழைப்பு விடுக்கப்பட்டதால், மாதாந்திரப் பேட்டியினை நமது எழுச்சி மிகு மாநிலச் செயலர்கள் நிராகரித்து வெளியேறினர்.

                மீண்டும் நடைபெற்ற இறுதி கட்ட பேச்சு வார்த்தையில்,

1. பொங்கல் அன்று துரித தபால் பட்டுவாடா உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
2. தூத்துக்குடி தோழியர் துர்கா தேவியின் மாறுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3. மேலூர் தெற்கு, மதுரை துணை அஞ்சலகம் மூடப்பெறும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

            மற்ற பல ஆண்டுகளாக தேங்கிக் கிடைக்கும் பிரச்சினைகளும் தீராமல், திரும்பிச் செல்ல இயலாது என்று ஆர்ப்பரித்த எழுச்சி மிகு தோழர்களுக்கு, மீண்டும் 21.01.14 அன்று மறுகட்ட பேச்சு வார்த்தை, அஞ்சல் மாநில மற்றும் மண்டலச் செயலர்களால் நடைபெறும் அன்று கோரிக்கைகள் அனைத்தும் தீர்க்கப்படவில்லை என்றால் மாநிலம் தழுவிய உச்சகடட போராட்டத்திற்கான அறை கூவல் அன்றே விடுக்கப்படும், என்று மாநிலச் செயலர் உறுதி அளித்தார். 

            மாநிலத்தலைமையின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஒத்துழைப்பு நல்க வேண்டும், ஒற்றுமையோடு இணைந்து போராட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்கின்ற என் வேண்டுகோளுக்கும், மாநில செயலரின் வேண்டுகோளின் பேரிலும், தென் மண்டலத்தின் அராஜகப் போக்கிற்கு எதிரான போராட்டம், தற்காலிகமாக முடிவு பெற்றது.

தொடர் முழக்கப் போராட்டதிற்கான எழுச்சி மிகு காட்சிகள் இதோ.....









Thursday, 9 January 2014

போராட்டக் களமாகிறது மதுரை - நாள் 10.01.14 காலை 0930 மணியளவில் மதுரை மண்டலம் முன்பு

தமிழ் மாநில NFPE பேரியக்கத்தின், அஞ்சல் மூன்று - அஞ்சல் நான்கு - GDS சங்கங்கள் - RMS - MMS ஆகிய அனைத்து சங்கங்களும் ஓரணியாகத் திரண்டு, மதுரை மண்டலத்தில் நடைபெறும் காட்டாட்சியை முடிவிற்குக் கொண்டு வர நாளை 10.01.14 அன்று காலை 0930 மணியளவில் தொடர் முழக்கப் போராட்டத்தினை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதுரைக் கோட்டத்திற்கென கீழ்க்காணும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் வரை மாநிலச் சங்கத்தின் ஆணைக்கு இணங்க தொடர் போராட்டங்கள் நடத்த மதுரை மண்டலத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து ஊழியர்களும் தங்களால் முடிந்த வரை விடுப்பு எடுத்துக் கொண்டு காலந்தவறாமல் 10.01.14 அன்று காலை 0930 மணிக்கு  மதுரை தென் மண்டலத்தின் வாயிலில் கூடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்




Monday, 29 April 2013

இன்று 29.04.13 தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில், பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அன்புத் தோழர்களே, தோழியர்களே,.....

                        அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்தின் அறைகூவலின் படி, ஏழாவது ஊதியக்குழுவினை விரைவில் அமைக்க வலியுறுத்தியும், 50% அகவிலைப்படியினை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்திட வேண்டியும், புதிய பென்சன் திட்டத்தினைக் கைவிட கோரியும், தல்லாகுலம் த்லைமை அஞ்சலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று 29.04.13 மாலை 0530 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைத்து ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வீர வாழ்த்துக்களுடன்,
K. நாராயணன், 
NFPE P3 மண்டலச் செயலர், மதுரை.