நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய
தோழர் கோபு கோவிந்தராஜன்
( அகில இந்திய அமைப்புச் செயலர் - தென் சென்னை கோட்டம்) அவர்கள் தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம்
கடந்த 24.06.2013-ல் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் அஞ்சல் நான்கின் அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் கோபு.கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போன்று காலியாக இருந்த மாநில அமைப்பு செயலாளர் பதவிக்கு திருச்சி கோட்ட செயலாளர் தோழர் S.கோவிந்தராஜன் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்விரு நிர்வாகிகளின் பணி சிறக்க தமிழக அஞ்சல் மூன்று, தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழு மற்றும் தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
சால்வை பெறுபவர் : தோழர் . கோபு கோவிந்தராஜன்