Showing posts with label Issues Taken. Show all posts
Showing posts with label Issues Taken. Show all posts

Saturday, 24 August 2013

CIRCLE UNION STRUGGLE PROGRAMME AT SOUTHERN REGION

போராட்டத் தீ பரவட்டும் !

OOOOOOOOOOOO 

 தென் மண்டல (பொறுப்பு)  இயக்குனரின் அடாவடிச் செயல்கள்  மற்றும் ஊழியர் விரோதப்  போக்கினைக் கண்டித்தும் ,

 தென் மண்டலத்தில் மலை போல தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும், 

பலமுறை பேசியும் எழுதியும்  இவற்றையெல்லாம்  தட்டிக் கேட்க வேண்டிய  மண்டல நிர்வாகம்  தனக்கென்ன என்ற ஏனோ தானோ மனோ பாவத்தில் இருப்பதைக் கண்டித்தும்  

தென் மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோட்ட/ கிளைகளிலும் எதிர்வரும் 04.09.2013 அன்று மாலை  கோட்ட/ மற்றும் தலைமை அஞ்சலகம் முன்பாக  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

அதே நேரத்தில் மதுரை மண்டல அலுவலகம் முன்பாக மாநிலத்  தலைவர், மாநிலச் செயலர் , மண்டலச்   செயலர்   கலந்து கொள்ளும்  கண்டன ஆர்ப்பாட்டம்   -  மற்றும்  தென் மண்டல அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தல் !

OOOOOOOOOOOOOO 

அன்புத் தோழர்களே ! கடந்த 10.08.2013 அன்று   மதுரையில் நடைபெற்ற தென்மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவின் படி தென் மண்டல (பொறுப்பு)  இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும்,   தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைத்  தீர்க்கக் கோரியும், முதற் கட்டமாக   கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி தென்  மண்டல   PMG அவர்களிடம்கோரிக்கை  மனு அளிப்பதென்றும், அதே நேரத்தில்  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளிலும் அவரவர் பகுதியில் உள்ள கோட்ட/ தலைமை அஞ்சலக வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தியும்  தென் மண்டல  (பொறுப்பு ) இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும்  கண்டன ஆர்பாட்டம் நடத்துவதெனவும்  முடிவு எடுக்கப் பட்டது தெரிந்ததே .   

Monday, 29 April 2013

இன்று 29.04.13 தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில், பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அன்புத் தோழர்களே, தோழியர்களே,.....

                        அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்தின் அறைகூவலின் படி, ஏழாவது ஊதியக்குழுவினை விரைவில் அமைக்க வலியுறுத்தியும், 50% அகவிலைப்படியினை அடிப்படைச் சம்பளத்தோடு இணைத்திட வேண்டியும், புதிய பென்சன் திட்டத்தினைக் கைவிட கோரியும், தல்லாகுலம் த்லைமை அஞ்சலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று 29.04.13 மாலை 0530 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைத்து ஊழியர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வீர வாழ்த்துக்களுடன்,
K. நாராயணன், 
NFPE P3 மண்டலச் செயலர், மதுரை.

Monday, 25 June 2012

PROGRAMME OF ACTION OF THE CIRCLE UNION ON SALEM WEST AFFAIRS


சேலம் மேற்குக் கோட்டக் கண்காணிப்பாளரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து 

ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில் எடுக்கப் பட்ட பழிவாங்கும்  நடிவடிக்கைகளை ரத்து செய்திடக் கோரி 

பொய்யான பயணப்படி , உணவுக்கட்டணம், தங்குமிடம் குறித்து அவர் பெற்ற லட்சக் கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை உடன் கண்காணிப்பாளரிடம் இருந்து பிடித்திடக் கோரி 

CCS ( CCA) RULES 1965 விதி 14 இன் கீழ் அந்த விதியில் சொல்லியபடி பொய்யான பயணப் படி பெற்றது குறித்து கண்காணிப்பாளர் மீது உடன்ஒழுங்கு நடவடிக்கை கோரி 

Monday, 4 June 2012

RT Guidelines Not followed:


Non relief of Shri Rajan, PA, Madurai H.P.O to Arasaradi H.P.O on 31.05.12 by Sr. PM Madurai H.P.O.


The issue was taken up with SSPOs, Madurai Division. After satisfactory reply from SSPOs, the issue was not pressed.


தோழமையுடன்,
K. நாராயணன், NFPE Divisional Secretary, Madurai division.