அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
தொழிலாளர் நல ஆணையம் முன்பாக மேலும் ஒரு சுற்று பேச்சு வார்த்தைக்கு நாம் எதிர்வரும் 15.10.2012 அன்று அழைக்கப்பட்டுள்ளோம். அந்தப் பேச்சு வார்த்தையில் நமது புகார்களுக்கு ஆதாரமாக எழுத்து பூர்வமான புகார்களோ அல்லது நேரடி சாட்சியமோ (ORAL EVIDENCE) அளிக்குமாறு நாம் கோரப்பட்டுள்ளோம் . எனவே பாதிக்கப் பட்ட எந்த ஒரு தோழர்/ தோழியரும் நம் சங்கம் மூலமாக அவர்களது புகாரை அளிக்கலாம்.
அப்படி அளிப்பதாயின் உடன் கையெழுத்துடன் கூடிய புகார் மனுவை
தொழிலாளர் நல ஆணையர் என பெயரிட்டு நம் மாநிலச் சங்கத்திற்கு அந்தந்த கோட்ட/கிளைச் செயலர் மூலம் உடன் ஸ்கேன் செய்து E-MAIL லிலோ அல்லது விரைவுத் தபாலிலோ அனுப்பி வைக்கவும்.
நேரடி சாட்சியம் அளிக்க விரும்பும் தோழர்கள் மாநிலச் செயலரிடம் தொடர்பு கொண்டு விபரம் கூறி 15.10.2012 அன்று விடுப்பெடுத்து நேரில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். நீங்கள் அனுபவித்த கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பு இது . உடன் செயலாற்றவும்.
கீழே தொழிலாளர் நல ஆணையத்தின் தாக்கீது பார்க்கவும்.
No comments:
Post a Comment