Saturday, 6 October 2012

BI-LATERAL DISCUSSIONS ON STRIKE BY CPMG WITH JCA LEADERS


தொழிலாளர் நல ஆணையர்  உத்திரவுப்படி  05.10.2012  மாலை 03.30 மணியளவில்  CPMG TN  அவர்களால்  அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைக்கு வேலைநிறுத்த  நோட்டீஸ்  அளித்த JCA  தலைவர்கள் அழைக்கப் பட்டனர். NFPE/FNPO  சார்பில் 13 மாநிலச் செயலர்கள்  பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் .  மதுரை அஞ்சல் பயிற்சி மைய  இயக்குனரின்  அடாவடித்தனங்கள் குறித்தும் ,  பயிலாளர்களுக்கு  இழைக்கப் பட்ட கொடுமைகள் குறித்தும்  விரிவாக விவாதிக்கப் பட்டது.  

மேலும்  தோழர் ஜெயகுமாரின்  தற்கொலைக்கு  பயிற்சி மைய இயக்குனரின்  கொடுமைகளே காரணம் என்பதையும் விரிவாகத் தெரிவித்தோம் . அதே போல  தென் மண்டல இயக்குனரின்  அத்து மீறிய செயல்களையும் ,  இந்த தற்கொலையில் அவரின் வரம்பு மீறிய செயல்களையும் ,  உண்மைகளை மறைத்து  , அஞ்சல் மைய  இயக்குனருக்கு ஆதரவாக அவர் செயல் படும் தவறான விதம் குறித்தும்  விரிவாகத் தெரிவிக்கப் பட்டது.  இவை அனைத்தையும் CPMG அவர்கள் பொறுமையாகக் கேட்டறிந்தார். பல்வேறு கேள்விகளை கேட்டும் அதன் மீது விளக்கங்களையும்  பெற்றார். கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது.

இறுதியாக  நம்முடைய  வேலை நிறுத்தத்திற்கான  மூன்று கோரிக்கைகளையும்  உடன்  நிறைவேற்ற வேண்டுமென நாம் வேண்டினோம் 

அதற்கு  CPMG TN  அவர்கள் கீழ்க்கண்டவாறு  பதில் அளித்தார். 

1. PTC, MADURAI  இல் நடக்கும்  விதிகளை மீறிய  தவறான  ( EXCESS ) நடவடிக்கைகள்  நிறுத்தப் படுவதற்கு  உடன்  ஆவன செய்யப் படும்.

2. பாதிக்கப் பட்ட ஊழியர்கள் ,  அவர்களுக்கு  இழைக்கப் பட்ட அநீதி குறித்து உரிய புகார் CPMG க்கு , நேரிலோ  அல்லது  விரைவு/ பதிவுத் தபாலிலோ  தெரிவிக்கப் பட்டால் , விசாரித்து  ஆவன  நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

3. மேலும்  இவை குறித்து PTC  இயக்குனர்  மற்றும்  தென் ,மண்டல  இயக்குனர் ஆகியோரிடம்  அவரே நேரில் சென்று  விசாரித்து  ஆவன நடவடிக்கை மேற்கொள்வார் .

4. PTC  இயக்குனர் DIRECTORATE  இன் நேரடி CONTROL  இல் உள்ளதால்  அவரை உடனே  இடமாற்றம் செய்திட அல்லது  இடை நீக்கம் செய்திட  இயலாது. 

5. தோழர். ஜெயகுமாரின்  தற்கொலை குறித்தும் , PTC, DIRECTOR  மற்றும் தென் மண்டல  இயக்குனரின் அத்து மீறிய செயல்கள் குறித்தும்  மாநில நிர்வாகத்தால்  சென்னையில் நடைபெறும் வண்ணம்   உரிய உடனடி விசராணைக்கு உத்திரவிடப்படும்.

6. இது குறித்து  உரிய ஆதாரங்களுடன்  எந்த ஒரு ஊழியரும் , அல்லது உறவினரும்  தபாலிலோ அல்லது நேரிலோ  புகாரை அவருக்கு  அளிக்கலாம்.  அதன் ரகசியங்கள் காக்கப் படும். 

7. விசாரணை  குறுகிய கால அவகாசத்தில் 15.10.2012 க்குள் முடிக்கப் பட்டு , அதன் மீது  இரகசிய விசாரணை அறிக்கை  டெல்லிக்கு  அனுப்பப் பட்டு அதன் மீது  உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

8. விசாரணை காலத்தில் INDUCTION TRAINING  மற்றும் நடப்பில் உள்ள பயிற்சி தவிர , வேறு எந்த MID CAREER TRAINING ம் நடத்தப் படாது. 

9. மீண்டும் 16.10.2012 இல் இது குறித்து  அடுத்த கட்ட  பேச்சு வார்த்தைக்கும்  ஊழியர் தரப்பிருக்கு அழைப்பு விடுக்கப் படும்.

இந்த பதிலின் மீது  நமக்கு முழு உடன் பாடு ஏற்படாததாலும் , இதற்குரிய  RECORDED MINUTES  திங்களன்று  இறுதி செய்யப்படுவதாலும்   இதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA கூடி  திங்களன்று  முடிவு எடுப்பதாக அறிவிக்கப் பட்டது. 

கோட்ட/கிளைச் செயலர்களுக்கு/ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

CPMG, TN  அவர்களால் அறிவிக்கப் பட்டுள்ள உயர் மட்ட விசாரணைக்கு  உங்கள்  பாதிப்புகள் ஏதும் இருப்பின்  உடன் நேரடி புகார்  மனுவை  திருமதி. ஹில்டா ஆபிரகாம் , IPS, CHIEF POSTMASTER GENERAL, TN CIRCLE,
CHENNAI 600 002 என்று  பெயரிட்டு  விரைவுத் தபாலிலோ  அல்லது பதிவு தபாலிலோ  உடன் அனுப்பிட  வேண்டுகிறோம்.

இது போல  தோழர். ஜெயகுமாரின்  தற்கொலை குறித்து எவருக்கு  உரிய விபரம் தெரிந்தாலும்  CHIEF PMG, TN  அவர்களுக்கு நேரிலோ அல்லது  விரைவுத் தபாலிலோ  அல்லது பதிவுத் தபாலிலோ  விரிவாக எழுதி கையெழுத்திட்டு  அளிக்கவும்/ அனுப்பவும்.  உங்கள்  விபரங்கள் கண்டிப்பாக CHIEF PMG  TN அவர்களால் பாதுகாக்கப் படும். 

உடன் செயல் படுங்கள் !  கால தாமதம்  உரிய நீதியைக் கொடுக்காது !
பயம்  நீதியை தூக்கில் தொங்க விடும் ! 
விதைக்கும் காலத்தில்  தூங்கிப் போனால் அறுக்கும் காலத்தில் எதுவும் இருக்காது !

No comments: