அன்புத் தோழர்களே ! தோழியர்களே !
15.10.2012 அன்று தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் அழைக்கப் பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் , நிர்வாகத் தரப்பில் CPMG TN சார்பாக முதலில் , ஏற்கனவே 05.10.2012 அன்று ஊழியர் தரப்புடன் பேச்சு வார்த்தை நடைபெற்று விட்டதாகவும் , அதன் அடிப்படையில் MINUTES அளிக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை தொடங்கி விசாரணை நடந்து வருவதாகவும் ஆகவே இதனையும் மீறி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்றும் ஒரு கடிதம் அளிக்கப்பட்டது . மேலும் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தாலும் இந்த சூழ்நிலையில் இனி பேச்சு வார்த்தை நடத்திடவேண்டாம் என்றும் நிர்வாகம் முடிவாக இருந்தது.
நாம் ஏற்கனவே அளித்த MINUTES மீதான கடிதத்தை சுட்டிக் காட்டி , எவ்வளவு தூரம் தவறான தகவல்கள் நிர்வாகத்தால் அளிக்கப் படுகின்றன என்பதை விளக்கினோம் . மேலும் விசாரணை எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து எவருக்காவது தகவல் தெரியுமா ? அப்படி ரகசிய விசராணை நடைபெற்றால் அது சரியா ? இந்த விபரம் அறிவிக்கையாக வெளியிடப்படாமல் விசாரணை அதிகாரி தனக்கு சாதகமான சாட்சியங்களை மட்டும் கூட்டி விசாரிக்கிறாரா ? எவர் எவரிடம் விசராணை செய்தார் என்றெல்லாம் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு நிர்வாகத் தரப்பில் சரியாக பதில் அளிக்க முடியவில்லை . இதனால் கோபம் அடைந்த தொழிலாளர் நல ஆணையர் " உங்கள் செய்கை வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்கு பதில் தூண்டுவதாக உள்ளது . இப்படியெல்லாம் செய்தால் CABINET SECRETARY அளவில் REPORT அனுப்ப வேண்டியிருக்கும்" என்று நிர்வாகத் தரப்பை எச்சரித்தார். விசாரணை என்பது வெளிப்படையாக அறிவிக்கப் பட்டு அனைவருக்கும் புகார் அளிக்க வாய்ப்பு அளிக்கப் படவேண்டும் என்றும் , அதனை புகாருக்குள்ளான அதிகாரியின் CADRE க்கு மேலான பதவியில் உள்ளவர் தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் , விசாரணையின் எல்லை வரம்பை விரிவு படுத்தி TERMS OF REFERENCE அளிக்கப் படவேண்டும் என்றும் நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.
உடன் CPMG அவர்களை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் . எனவே வேறு வழியில்லாமல் பேச்சு வார்த்தைக்கு நேரம் கேட்டுப் பெறப்பட்டு அறிவிக்கப் பட்டது . இதன் படி 16.10.2012 அன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற வுள்ளது .
தோழர்களே ! நிர்வாகத்தின் போக்கு உங்களுக்கு புரிந்திருக்கும் .
வேலை நிறுத்த அறிவிப்பில் பேச்சு வார்த்தை ஒரு பகுதி.
அது JCA தலைவர்களின் வேலை.
உங்கள் வேலை ?
போரின் முடிவுக்காக கை கட்டி காத்திருக்கலாமா ?
போர்க்களத்தில் இறங்கி விட்டால் , ஆயுதத்தை மடக்கி வைத்து முடிவு இன்று வரும், நாளை வரும் என்று வேடிக்கை பார்க்கலாமா ?
உங்களின் போராட்ட தயாரிப்பின் வீச்சு தானே
தலைவர்களின் பேச்சு வார்த்தையில் பலம் சேர்க்கும் ?
No comments:
Post a Comment