இன்று மாலை (16.10.2012) DPS HQRS உடன் STRIKE MINUTES பெற நடந்த சந்திப்பின் போது LSG PROMOTIONAL LIST குறித்து நாம் விவாதித்தோம். அதற்கு அவர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் LSG LIST வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். மேலும் ஏற்கனவே அந்தந்த கோட்டங்களில் காலியிடங்கள் இல்லாததால் வெளியிடங்களுக்கு சென்று பணியாற்றி வரும் LSG ஊழியர்களுக்கு , இந்தப் பட்டியல் வெளியிடும் போது அவரவர்கள் கோட்டங்களுக்கு மாறுதல் தர வேண்டினோம். இது குறித்து CPMG அவர்களுடன் பேசி நிச்சயம் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்கள்.
மேலும் செய்தி:
தற்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள நேரடி எழுத்தர் தேர்வுக்கு 652 காலியிடங்கள் அறிவிக்கப் பட உள்ளன.
LGO தேர்வு மூலம் நடைபெறும் எழுத்தர் தேர்வுக்கு 375 காலியிடங்கள் அறிவிக்கப் பட உள்ளன.
இது மொத்தமுள்ள ஊழியர் பணியிடங்களில் 11.4 % ஆகும். இதன் மூலம் SHORTAGE பெருமளவு குறையும்.
No comments:
Post a Comment