விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள முதலிப்பட்டியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 37 பேர்உயிரிழந்துள்ளனர். . 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
இந்த வெடிவிபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் மதுரை அஞ்சல கோட்டம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிவகாசி பற்றி ஒரு சிறு செய்தி தொகுப்பு
*சிவகாசியில் 9 ஆயிரத்துக்கு அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன.
*இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் சிவகாசியில் உற்பத்தி ஆகிறது.
*இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80 சதவீதம் சிவகாசியில்தான் உற்பத்தி ஆகிறது.
*பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி தவிர அச்சு துறையிலும் சிவகாசி முன்னணியில் உள்ளது.
*உலகிலேயே ஆப்செட் அச்சகங்கள் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் சிவகாசிக்கு இரண்டாவது இடம். 400க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இங்கு உள்ளன.
*இந்த நகரில் வேலை இல்லா திண்டாட்டம் என்பதே கிடையாது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேலை கண்டிப்பாக கிடைக்கும்.
*இங்குள்ள மக்களின் சுறுசுறுப்பை பார்த்து குட்டி ஜப்பான் என்று பெயர் சூட்டினார் நாட்டின் முதல் பிரதமர் நேரு.
10 ஆண்டுகளில் நடந்த பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் பிற பகுதிகளில் கடந்த 10ஆண்டுகளில் நடந்த முக்கியமான பட்டாசு விபத்துகள்:
24.9.2002
கோவில்பட்டி அருகே முடக்கமிட்டான்பட்டி பட்டாசு தீ விபத்தில் 16 பேர் பலி.34 பேர் காயம்.
2.7.2005
சிவகாசி மீனாம்பட்டி விபத்தில் 20 பேர் பலி. 15 பேர் காயம்.
22.2.2006
சிவகாசி பர்மா காலனி விபத்தில் 12 பேர் பலி.
12.6.2007
சிவகாசி நாராயணபுரம் விபத்தில் 4 பேர் பலி.
7.7.2009
மதுரை அருகே வடக்கம்பட்டி விபத்தில் 19 பேர் பலி.
20.7.2009
சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி விபத்தில் 18 பேர் பலி.
27.7.2009
சிவகாசி விபத்தில் 3 பேர் பலி.
16.6.2010
சிவகாசி விபத்தில் 7 பேர் பலி.
24.9.2010
சிவகாசி விபத்தில் ஒருவர் பலி.
21.1.2011
விருதுநகர் விபத்தில் 8 பேர் பலி.
26.4.2011
சிவகாசி விபத்தில் 2 பேர் பலி.
29.6.2011
தூத்துக்குடி குரும்பூரில் 4 பேர் பலி.
No comments:
Post a Comment