ஏழாவது ஊதியக் குழு வேண்டி பாராளுமன்றம் நோக்கிய பேரணி !
.......................................................................................................................................................
எதிர் வரும் 26.07.2012 அன்று , ஏழாவது ஊதியக் குழு வேண்டியும் , புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடக் கோரியும் பாராளு மன்றம் நோக்கிய அனைத்து மத்திய , மாநில , பொதுத் துறை ஊழியர்களின் பேரணிக்கு நம் தமிழக அஞ்சல் மூன்று சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட /கிளைகளில் இருந்தும் நமது தோழர்கள் ஏராளமாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .
ரயில் டிக்கெட்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் மட்டுமே இது
சாத்தியம் ஆகும். தற்போது குறைந்த டிக்கெட்களே உள்ளன. உடனே
முன் பதிவு செய்திடவும் .இல்லையெனில் WAITING LIST வந்துவிடும்.
24.07.2012 இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இலும் அதே போல 27.07.2012 இரவு அதே ரயிலிலும் டிக்கெட் முன்பதிவு செய்திடவும். இந்த ரயில் வண்டி தான் குறைந்த நேரம் அதாவது 33 மணி நேரத்தில் பயணிக்கும் . இதர வண்டிகள் அதிக பயண நேரம் எடுத்துக் கொள்ளும்.
முன்னதாக ஒருநாள் டெல்லி சுற்றுப் பயணம் செய்ய விரும்பும் தோழர்கள் 23.07.2012 அன்று டுராண்டோ ரயிலில் புக் செய்திடலாம். கட்டணம் கொஞ்சம் அதிகம் . ஆனால் பயண நேரம் 28 மணி நேரம் தான். இதே போல 28.07.2012 காலையில் இதே ரயிலிலும் திரும்பும் பயணத்திற்கு முன் பதிவு செய்யலாம்.
கால தாமதம் செய்திடாமல் உடனே முன்பதிவு செய்யவும். பேரணியை
வெற்றிகரமாக ஆக்கவும் மாநிலச் சங்கம் உங்களை வேண்டுகிறது.
இந்த வலைத்தளத்தை பார்க்கும் தோழர்கள் உடனே இதனைப் பார்க்காத அல்லது பார்க்க வாய்ப்பில்லாத தோழர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
அன்புடன் ....... மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.
1 comment:
Again 'Delhi challo ' in our union
Post a Comment