Friday, 22 June 2012

CENTRAL WORKING COMMITTEE MEETING AT VELLORE ON 23/24.6.2012

நமது அகில இந்திய சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும்  23.6.2012 மற்றும் 24.6.2012 தேதிகளில் வேலூர் மாநகரில் நடைபெற உள்ளது
இதற்கான ஏற்பாடுகளை நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் ஏற்று  நடத்துகிறது.

வரவேற்புக் குழுத் தலைவராக தோழர் S. சந்தானராமன் அவர்களும் , பொதுச் செயலராக தோழர் S. வீரன் அவர்களும் வரவேற்புக் குழுவின் இதர நிர்வாகிகளாக

தோழர்.  B. அம்ருத கணேசன், மாநில உதவித் தலைவர், வேலூர்
தோழர் . A. குமரன், கோட்டச் செயலர், அரக்கோணம்
தோழர்.  G. ராமமூர்த்தி, கோட்டச் செயலர், செங்கல்பட்டு
தோழர்.  K. பிச்சாண்டி , கோட்டச் செயலர், திருவண்ணாமலை
தோழர்.  V. சுப்பிரமணி, கோட்டச் செயலர், திருப்பத்தூர்
தோழர்.  A. கேசவன், கோட்டச் செயலர், காஞ்சிபுரம்
தோழர்.  S. தனசேகரன் , கிளைச் செயலர், ராணிப்பேட்டை
தோழர்.  D. சுப்புராஜ் , கிளைச் செயலர், ஆரணி,
தோழர்.  C. நெடுஞ்செழியன், கிளைச் செயலர், குடியாத்தம் 

ஆகியோரும் கூட்டுப் பொறுப்பாகநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்த மத்திய செயற்குழு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடத்தப்படுவது சிறப்பாகும் .

நம்முடைய அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS  அவர்களின் பொறுப்பில்நடக்கும் கடைசி செயற்குழு

புதிய பொதுச் செயலரை நாம் பெறப் போகும் முதல் செயற்குழு

ஆகவே எல்லா வகையிலும்  இந்த மத்திய செயற்குழுக் கூட்டம்  சிறப்பானதாகும் . நம் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்திற்கு இது ஒரு
வரலாற்று நிகழ்வாகும்.

இதற்கு முன்னர் எந்த ஒரு மாநிலச் செயலர் காலத்திலும் தமிழகத்தில்  மத்திய செயற்குழுக் கூட்டம் நடந்ததில்லைஎன்பதும் நமக்கு மேலும்  பெருமை சேர்க்கிறது .

மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தரும் நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர். M. கிருஷ்ணன் அவர்களையும , நம்முடைய பொதுச் செயலர் அறிவு ஜீவி தோழர்.KVS  அவர்களையும், துணைப் பொதுச் செயலர் தோழர் R. சிவநாராயணா அவர்களையும் , நிதிச் செயலர் தோழர் . பல்விந்தர் சிங் அவர்களையும், இதர மத்திய சங்க நிர்வாகிகளையும் , அனைத்து மாநிலச் செயலர்களையும் , சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்ளும் இதர பொதுச் செயலர்களையும் , நம்முடைய சம்மேளனத்தின்  மூத்த தலைவர்களையும்  இதர விருந்தினர்களையும்  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சார்பாக  இருகரம் நீட்டி வருக வருக வருக என்று மகிழ்வோடு அழைக்கிறோம்.

மத்திய செயற்குழு நல்ல முடிவுகளை எடுக்கட்டும் !
மத்திய செயற்குழு  சிறக்கட்டும் !

வாழ்த்துக்களுடன்
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்

No comments: