புதிதாக அறிமுகப் படுத்தப் படும் வணிகப் பணிகளுக்கு , அதற்கான TIME FACTOR வகுக்கப் படாததால் , அந்தப் பணியைப் பார்ப்பதற்கான AGENCY COMMISSION இல் 25% அதில் பணியாற்றும் ஊழியருக்கு வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே நாம் உத்திரவு பெற்றதை பலமுறை நம் வலைத்தளத்திலும் , சுற்றறிக்கையிலும் தெரிவித்திருந்தோம் . ஆனாலும் இதுவரை நம் கோட்டத்தில் இதற்கான பில் போடப் படவில்லை என்பது வருத்தமே.
தற்போது EB BILL பெற்றிட ஒரு BILL க்கு ரூ. 10.00 கமிஷன் ஆகப் பெறுகிறோம். இதில் 25% என்பது ரூ. 2.50 ஆகும். MPCM COUNTER CLERK கிற்கு ரூ. 2.00 ம் SUPERVISORக்கு ரூ. 0.50 ம் INCENTIVE ஆகப் பெறமுடியும். இதனை படித்த பிறகாவது உடன் பில் போட நமது கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அதிகாரிகளையும் அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அதே போல தபால் காரர்களுக்கு ஆதார் கடிதம் பட்டுவாடா செய்ய ஒரு கடிதத்திற்கு 0.50 PAISE ஊக்கத் தொகை வழங்கிட இலாக்கா உத்திரவு இட்டுள்ளது .நமது தபால்கார தோழர்களுக்கு இந்தப் பயனைப் பெற்றுக் கொடுக்க நமது கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அதிகாரிகளையும் கோட்ட சங்கம் வேண்டுகிறது.
அன்புடன்,
சி.சஞ்சீவி,
கோட்ட செயலர் P3
No comments:
Post a Comment