அன்பான கோட்ட/கிளைச் செயலர்களே ! வணக்கம் !
மதுரை கூட்டம்
கோவை கூட்டம்
Courtesy: AIPEUP3, Tamilnadu Circle
ஏழாவது ஊதியக்குழு , 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல் , புதிய பென்ஷன் திட்டத்தை கை விடக் கோருதல் , காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் 26.7.2012 அன்று நடை பெற உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பாராளு மன்றம் நோக்கிய பேரணி, மற்றும் எதிர்வரும் மாரிக்கால பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களின் முன்னோட்டமாக நாடு தழுவிய அளவில் தற்போது பிரச்சார இயக்கம் நடைபெற்று வருவதை நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
தமிழகத்தில் கடந்த 12, 13, 14 தேதிகளில் திருச்சி , மதுரை, மற்றும் கோவை நகரங்களில் இந்த சிறப்புக் கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. இன்று அதாவது 15.06.2012 அன்று சென்னையில் CPMG அலுவலகத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் இந்தக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி மற்றும் மதுரை கூட்டங்களில் தோழர். K.R. , செயல் தலைவர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ,தோழர் . KVS துணைத் தலைவர், மகா சம்மேளனம், மற்றும் வருமான வரித்துறையை சேர்ந்த தோழர். சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கோவை கூட்டத்தில் தோழர்.K.R. மற்றும் NFPE சம்மேளனத்தின் செயல் தலைவர் தோழர். சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் .
சென்னை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர் . K.K.N. குட்டி , தோழர் . K.R., தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன கன்வீனர் தோழர். துரைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ற்றினார்.
அனைத்து ஊர்களிலும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டது கோரிக்கையின் மீது ஊழியருக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை மற்றும் போராட்டத திற்கான வேகம் எடுத்திருப்பதற்கு சான்றாக அமைந்தது . மொத்தத்தில் ஆரம்பமே வெற்றிகரமாக அமைந்துள்ளது என்றால் , நிச்சயம் கோரிக்கையில் நாம் வெற்றி பெறுவோம் என்பது இன்றே உறுதி செய்யப் பட்டது எனலாம்.
திருச்சி, மதுரை , கோவை மற்றும் சென்னை கூட்டங்களின் புகைப் பட காட்சிகளை கீழே உங்களின் பார்வைக்கு அளிக்கிறோம். இனி பாராளு மன்றம் நோக்கிய பேரணிக்கு ஊழியர்களை திரட்ட வேண்டிய கடமையில் நீங்கள் ஈடு படுவீர்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
திருச்சி கூட்டம்.
மதுரை கூட்டம்
கோவை கூட்டம்
சென்னை கூட்டம்
No comments:
Post a Comment