பூவிதழின் மென்மை யினும்
மென்மையான அன்பு உள்ளம் !
அரவணைக்கும் அன்னை உள்ளம் !
எம் தலைவன் உள்ளம் !
விழி மலர்கள் வேலாகும் வாளாகும் !
தீங்கொன்று சங்கத்திற்கு வந்திட்டால் !
கால் மலர்கள் வாடிடினும்
அவர் கடும் பயணம் நிற்காது !
கை மலர்கள் பிணைத்து நிற்கும்
தம்பியரை சங்கத்தை !
அம்மலரே எதிரிகளை
மன்னித்து நெற்கதிர் போல்
தலை நாணச் செய்துவிடும் !
பேரறிஞர் அண்ணாவுக்கு
அவர் தம்பி எழுதியது போல
அறிவு ஜீவி KVS க்கு
அவர் தம்பிமார் எழுதியது இது !
மூன்றெழுத்தில் ஒரு சிறப்புண்டு !
அதில் முத்தமிழ் மண முண்டு !
மூவேந்தர் முக் கொடி முக்கனி என
மும்முரசு ஆர்த்தவர் தமிழர் !
அவர் வாழ்ந்த தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து !
அந்த வாழ்வுக்கு அடிப்படையாம்
அன்புக்கு மூன்றெழுத்து !
அன்புக்கு துணை நிற்கும்
அறிவுக்கு மூன்றெழுத்து !
அறிவார்ந்தோர் இடையில் எழும்
காதலுக்கு மூன்றெழுத்து !
காதலர் போற்றுகின்ற கடும்
வீரமோ மூன்றெழுத்து !
வீரம் மிக்கோர் காணுகின்ற
களம் மூன்றெழுத்து !
களம் சென்று காணுகின்ற
வெற்றி மூன்றெழுத்து !
அந்த வெற்றிக்கு நமைஎல்லாம்
இட்டுச் செல்லும்
அறிவு ஜீவி எம் தலைவன்
KVS மூன்றெழுத்து !
வெறும் உச்சியில்
இருப்பதல்ல தலைமைப் பண்பு !
சங்கத்தின் ரத்த நாளங்களோடு
பின்னிப் பிணைந்ததே உந்தன்
தலைமைப் பண்பு !
அரசுப் பணி நிறைவுற்றால் என்ன ?
அடுத்த பணி உனக்கிருக்கு !
அடுத்த தலைமுறை வளர்ப்பாய் நீ !
சங்க வேராக இருப்பாய் நீ !
நீவிர் வாழ்க பல்லாண்டு! வளர்க நாளும் உம் தொண்டு !
Courtesy : http://aipeup3tn.blogspot.in/
No comments:
Post a Comment