பாண்டிச்சேரி கோட்டத்தில் தபால்காரர் மற்றும் MTS பதவிகள் ஒழிக்கப் பட்டதை எதிர்த்து கடந்த மாதம் JCA அமைத்து அஞ்சல் நான்கு மற்றும் அஞ்சல் மூன்று தோழர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது நினைவிருக்கும்.
தற்போது நமது அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் ஆலோசனையின் பேரில் நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS , மற்றும் தோழர் வீரமணி தோழர் J .R . அவர்களின் உதவியோடு எர்ணாகுளம் முதன்மை அமர்வு மத்திய நிர்வாகத் தீர்ப்பாய உத்திரவின் அடிப்படையில் , பாண்டிச்சேரி கோட்டத்தில் பதவிகள் ஒழிக்கப் பட இடப்பட்ட உத்திரவை எதிர்த்து சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து ,
பாண்டிச்சேரி முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளரின் உத்திரவிற்கு தடையாணை பெற்றுள்ளார்கள்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
உத்தரவின் நகல் கீழே பார்க்கவும் !
No comments:
Post a Comment