Wednesday 21 August 2013

STAY GRANTED FOR OPERATION OF THE ORDERS OF ABOLITION OF POSTMAN/MTS POSTS AT TAMBARAM DN

கத்தியின்றி ரத்தமின்றி  சட்டத்தின் 
யுத்தம் ஒன்று  நடக்குது ! 

தாம்பரம் கோட்ட அஞ்சல் நான்கின் செயலர் தோழர் G . சுரேஷ் பாபு அவர்கள்  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் உதவியோடு , 
நமது முன்னாள்  பொதுச் செயலர் தோழர். KVS 
அவர்களது ஆலோசனையின் பேரில்  எர்ணாகுளம் முதன்மை அமர்வு மத்திய நிர்வாகத் தீர்ப்பாய  உத்திரவின் அடிப்படையில் , தாம்பரம் கோட்டத்தில்  பதவிகள் ஒழிக்கப் பட இடப்பட்ட உத்திரவை எதிர்த்து  சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்து , 

தாம்பரம் முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளரின்  உத்திரவிற்கு  தடையாணை  பெற்றுள்ளார் 

என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

இப்படி தடையாணை பெறலாம் என்று பல கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு நாம் அறிவுறுத்தியபோது  , இதனை சரியாகப் பயன் படுத்திக் கொண்டு ஊழியர்களை எந்தவித சேதாரமும் இன்றி  காத்திட தமிழகத்தில்  முதன் முதலில்  நடவடிக்கை எடுத்த  
தாம்பரம் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் 
தோழர். G . சுரேஷ் பாபு 
அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள். 

இதுபோல மற்றைய கோட்டங்களிலும்  தடையாணை பெற வழி உள்ளது. அப்படி விருப்பம் உள்ள கோட்ட/கிளைச் செயலர்கள்  

தோழர் G . சுரேஷ் பாபு அவர்களையோ, அல்லது  நம் மாநிலச் சங்கத்தையோ அணுகலாம் ! அவர்களுக்கு உரிய சட்ட உதவி செய்திட நம் மாநிலச் சங்கம்  தயாராக உள்ளது !

உத்தரவின் நகல் கீழே பார்க்கவும் !



No comments: