போராட்டத் தீ பரவட்டும் !
OOOOOOOOOOOO
தென் மண்டல (பொறுப்பு) இயக்குனரின் அடாவடிச் செயல்கள் மற்றும் ஊழியர் விரோதப் போக்கினைக் கண்டித்தும் ,
தென் மண்டலத்தில் மலை போல தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும்,
பலமுறை பேசியும் எழுதியும் இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மண்டல நிர்வாகம் தனக்கென்ன என்ற ஏனோ தானோ மனோ பாவத்தில் இருப்பதைக் கண்டித்தும்
தென் மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோட்ட/ கிளைகளிலும் எதிர்வரும் 04.09.2013 அன்று மாலை கோட்ட/ மற்றும் தலைமை அஞ்சலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
அதே நேரத்தில் மதுரை மண்டல அலுவலகம் முன்பாக மாநிலத் தலைவர், மாநிலச் செயலர் , மண்டலச் செயலர் கலந்து கொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் - மற்றும் தென் மண்டல அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்தல் !
OOOOOOOOOOOOOO
அன்புத் தோழர்களே ! கடந்த 10.08.2013 அன்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவின் படி தென் மண்டல (பொறுப்பு) இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும், தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும், முதற் கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி தென் மண்டல PMG அவர்களிடம்கோரிக்கை மனு அளிப்பதென்றும், அதே நேரத்தில் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளிலும் அவரவர் பகுதியில் உள்ள கோட்ட/ தலைமை அஞ்சலக வாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென் மண்டல (பொறுப்பு ) இயக்குனரின் அடாவடி நடவடிக்கைகளை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவதெனவும் முடிவு எடுக்கப் பட்டது தெரிந்ததே .
இதன் படி அளிக்கப் படும் கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப் படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டதும் நாம் அனைவரும் அறிவோம்!
எனவே இந்த முடிவை அமல் படுத்திட எதிர்வரும் 04.09.2013 அன்று தென் மண்டல PMG அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட வுள்ளது. கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் கூறிய படி இதுவரை 11 கோட்ட/ கிளைச் செயலர்களிடமிருந்து மட்டுமே தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகள் மாநிலச் சங்கத்திற்கு வந்துள்ளது. மீதியுள்ள கிளைகளில் இருந்து எதிர்வரும் 27.08.213 க்குள் வந்து சேருமாறு E-MAIL மூலம் பிரச்சினை களை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட கோருகிறோம். தென் மண்டலத் தில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகள் உடனே இதில் கவனம் செலுத்தி பிரச்சினைகளை பெற்று மாநிலச் செயலருக்கு அனுப்பிடக்கோருகிறோம்.
அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் இந்தப் போராட்டம் குறித்து உடன் நோட்டீஸ் வெளியிட்டு அதன் நகலை மண்டல PMG , மாநில CPMG மாநிலச் செயலர் ஆகியோருக்கு உடன் அனுப்பிட வேண்டுகிறோம். எந்தக் கிளையில் இருந்தும் நோட்டீஸ் வெளியிடாமல் இருந்துவிடக் கூடாது.
இதன் பொறுப்புகளை மண்டலத்தில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டுகிறோம்!
மாநிலச் சங்கத்தில் இருந்து கோரிக்கை மனு மற்றும் விரிவான நோட்டீஸ் விரைவில் வெளியிடப் படும் !
மதுரை கோட்டச் செயலர் , எதிர்வரும் 04.09.2013 அன்று மண்டல அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட, PMG அவர்களுக்கு கோரிக்கை மனு அளித்திட , தல மட்ட ஏற்பாடுகளை செய்திட மாநிலச் சங்கம் வேண்டுகிறது.
நீதி கேட்டு வீதியில் தோழர்களே இறங்குங்கள் !
வீதியில் இடும் முழக்கங்கள் மக்களுக்கு கேட்கட்டும் !
ஊடகங்கள் கேட்கட்டும் ! காதிருந்தால், கருத்திருந்தால்
அதிகாரிகளும் கேட்கட்டும் ! ஊழியர் பிரச்சினை தீர்க்கட்டும் !
பிரச்சினைகள் தீராது போனால் தொடருவோம் போராட்டம் !
விடமாட்டோம் விடமாட்டோம் ! பிரச்சினைகள் தீரும் வரை விடமாட்டோம் ! ஊழியர்களை அலட்சியப் படுத்த விடமாட்டோம் !
ஆணவத்தை வேரறுப்போம் ! அதிகார போதையை வேரறுப்போம் !
போராடுவோம் ! போராடுவோம் ! வெற்றிபெறும் வரை போராடுவோம் !
No comments:
Post a Comment