நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் , நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மாநில கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு செயலராக இலாக்காவால் .அங்கீகரிக்கப் பட்டார் . இதன் மூலம் இனி ஊழியர் தரப்பு பிரச்சினைகளை மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தில் நம்மால் முழுமையாக எடுத்துச் செல்ல இயலும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள். உங்கள் கோட்ட/கிளைகளில் தீர்க்கப் படாமல் உள்ள பொதுப் பிரச்சினைகள் (தனி நபர் பிரச்சினைகள் அல்ல ) , இலாக்கா விதி மீறிய உத்திரவுகள் , ஊழியர் சேம நலன் சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் இப்படி மாநில அளவில் எடுக்கக் கூடிய பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவற்றை தெளிவாக நீங்களோ அல்லது உங்கள் SYSTEM ADMINISTRATOR அல்லது E -MAIL அனுப்பத் தெரிந்த தோழர் மூலமோ நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்திற்கு எதிர்வரும் 08.09.2013 க்குள் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆட்பற்றாக்குறை பிரச்சினை என்பதை உரிய புள்ளி விபரங்களுடன் அளித்திட வேண்டுகிறோம் . ஏனெனில் இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே பலமுறை சரியான தகவல் தராததால், நம் கோரிக்கை இழுத்தடிக்கப் பட்டு நிராகரிக்கப் பட்டது என்பதை நினைவில் கொள்ளவும் .
அது P 4, R 3, R 4, ADMIN , ACCOUNTS , SBCO, GDS பிரச்சினைகளாக இருந்தாலும் அந்த அந்த மாநிலச் செயலர்களுக்கு பிரச்சினைகளை அனுப்பி , அதன் நகலை மட்டும் அஞ்சல் மூன்று மாநிலச் சங்க முகவரிக்கு தவறாமல் அனுப்பிடக் கோருகிறோம் .
மின்னஞ்சல் முகவரி : aipeup3tn@gmail.com
தயவு செய்து அலட்சியப் படுத்தாமல் , கால தாமதப் படுத்தாமல் இந்த செயலை செய்திட வேண்டுகிறோம். நிச்சயம் உங்கள் பிரச்சினை எதிர்வரும் 10.09.2013 க்குள் மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தின் விவாதத்திற்கு வைக்கப் படும் . இப்போது விடுபட்டால் இனி அடுத்த 4 அல்லது 5 மாதம் கடந்த பின்னரே மறுபடியும் பிரச்சினை வைக்க முடியும் ஏற்கனவே எடுக்கப் பட்டு தீர்க்கப் படாத பிரச்சினைகள் ஆனாலும் மீண்டும் அதனை எழுப்பிட நிச்சயம் முயற்சிக்கிறோம். எனவே அதனையும் கருத்தில் கொள்ளவும் .
RJCM என்பது மாநில அளவில் உச்ச மட்ட அமைப்பு என்பதால் நிச்சயம் பல பிரச்சினைகளை இதில் எடுத்துச் சென்று பேசி தீர்த்திட சட்ட ரீதியாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொண்டிட வேண்டுகிறோம். இதர மத்திய அரசு , மாநில அரசு , பொதுத் துறைகளில் இப்படிப் பட்ட வாய்ப்புகள் மறுக்கப் பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.
எனவே இந்த அமைப்பை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறோம். இந்த செய்தியை , இதனை படிக்கும் அனைத்து தோழர்களும் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள் படிக்காமல் இருந்தால், அவர்களுக்கு தெரிவித்து முழுமையாக உபயோகப் படுத்திக் கொள்ளவும்.
ஒருபுறம் நாம் வாதாடும் களம் !
முடியவில்லையானால் போராடும் களம் !
நிச்சயம் பிரச்சினையை தீர்த்திட முயலுவோம் !
நன்றியுடன்
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம் .
No comments:
Post a Comment