அன்புத் தோழர்களே ! வணக்கம் !
கீழ்க் காணும் தேதிகள் மற்றும் இடங்களில் 12.12.12 வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த கூட்டங்கள் நடைபெறும். அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் அந்தந்த பகுதி ஊழியர்களை ஒன்று திரட்டி வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்களில் கலந்து கொள்ள ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் .
சென்னை பெருநகர் பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் சென்னை பகுதியில் ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
19.11.2012 வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கப் படும் தேதியில் சென்னை பெருநகரத்தில் உள்ள கோட்ட/கிளைகளின் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியிலிருந்து தோழர்களை அதிக அளவில் திரட்டி CPMG அலுவலக வாயிலில் மதியம் 12.00 மணியளவில் நடைபெற உள்ள உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டப் படுகிறார்கள்.
சென்னை நகரப் பகுதி கோட்டங்களில் 25.11.2012 க்குப் பிறகு ஆங்காங்கே கோட்ட / கிளை அளவிலான வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்கள் நடத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுவின் முடிவின் படி வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறும் விபரம் :-
18.11.2012 - ஞாயிறு மதியம் 02.00 மணி - விழுப்புரம் தலைமை அஞ்சலகம்.
19.11.2012- திங்கள் மதியம் 12.00 மணி - CPMG அலுவலகம் எதிரே-
ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தல் .
20.11.2012 - செவ்வாய் மதியம் 01.00 மணி - ஆர்ப்பாட்டம் - தி. நகர் HPO
21.11.2012 - புதன் மாலை 06.00 மணி - கூட்டம் - கோயமுத்தூர் HPO
22.11.2012 - வியாழன் மாலை 06.00 மணி - கூட்டம் - மதுரை HPO
23.11.2012 - வெள்ளி மாலை 06.00 மணி - கூட்டம் - திருச்சி HPO
24.11.2012 - சனி மாலை 06.00 மணி - கூட்டம் - CPMG அலுவலக வளாகம்
இது தவிர CONFEDERATION சார்பாக நடைபெறும் கூட்டங்களிலும் அந்தந்தப் பகுதி தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
21.11.12- பகல் 01.00 மணி - ஆர்ப்பாட்டம் - ராஜாஜி பவன் , பெசன்ட் நகர்.
22.11.12 - பகல் 01.00 மணி - ஆர்ப்பாட்டம் - POSTAL ACCOUNTS , எக்மோர் .
23.11.12- மாலை 03.00 TO 07.00 - தார்ணா - மெமோரியல் ஹால் - OPP TO PARK
TOWN HPO
அணி திரள்வீர் ! ஆர்ப்பரிப்பீர் !
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக ஆக்குவீர் !
No comments:
Post a Comment