Thursday 27 March 2014

LETTER FROM GENERAL SECRETARY TO SECRETARY POSTS FOR EXTENSION OF LAST DATE FOR SUBMISSION OF DIRECT RECTT. PA/SA EXAM APPLN

எழுத்தருக்கான நேரடித் தேர்வு ONLINE  இல் விண்ணப்பிக்க  அதற்கான இணைய தளம் கடந்த  ஒரு வாரமாக கிடைக்க வில்லை என்று  தமிழகமெங்கும் நம் மாநிலச் சங்கத்திற்கு புகார் தொடர்ந்து வந்தவுடன்,   தற்போது  டெல்லியில்  இருக்கும் நம்முடைய  துணைப் பொதுச் செயலரை தொலைபேசியில்  நாம் தொடர்பு கொண்டு , பொதுச் செயலரின் கவனத்திற்கு இதனை எடுத்துச் செல்ல வேண்டினோம். 

அதன் விளைவாக  உடன் இந்தப் பிரச்சினை  நம்முடைய இலாக்கா முதல்வரின் கவனத்திற்கு  நம்முடைய பொதுச் செயலர் மூலம்  கொண்டு செல்லப் பட்டுள்ளது. மேலும்  விண்ணப்பம் செய்ய  கடைசி நாள் உடன் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும்  கோரியுள்ளோம். உடன்  இந்தப் பிரச்சினையை  பொதுச் செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவன  மேற்கொண்ட  நம் துணைப் பொதுச் செயலாளருக்கும் , பிரச்சினையை உடன் எடுத்த  பொதுச் செயலாளருக்கும்  நம் நன்றி !


No comments: