Wednesday, 6 February 2013

MINUTES COPY OF THE BMM , SOUTHERN REGION


அன்புத் தோழர்களே ! வணக்கம் ! தென் மண்டலத்தில்  நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி நடைபெற்று அதன் MINUTES  COPY  அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு புதிதாக மாறுதலில் பணியில் அமர்ந்த  திருமதி . சாருகேசி PMG , SR  அவர்களுடன் நமது மண்டலச் செயலர் தோழர். K . நாராயணன் அவர்கள் கடந்த 19.1.2013 அன்றும் 04.02.2013 அன்றும்  நேர் காணல்  பெற்று  பல்வேறு ஊழியர் பிரச்சினைகளை பேசியுள்ளார். அதில் பல தீர்க்கப்பட உறுதி அளிக்கப் பட்டுள்ளன. 

ஏற்கனவே நடைபெறாமல் இருந்த ராமநாதபுரம் கோட்ட மாதாந்திர பேட்டி  CPMG  தலையீட்டில்  கடந்த 27.12.2012 அன்று நடத்தப் பட்டது. 

இதுபோல பழி வாங்கும் நடவடிக்கையாக பாம்பன் SPM  தோழர். P . நாகராஜன் அவர்கள் அங்கிருந்து 90 கி. மீ. தொலைவில் உள்ள ஆனந்தூர் SO  விற்கு மாறுதல் அளிக்கப் பட்டிருந்தது , தற்போது சரி செய்யப்பட்டு  அவரின் விருப்பப் படி அருகில் உள்ள ராமேஸ்வரம் SO  விற்கு உத்திரவு அளிக்கப்பட்டு பணியில் அமர்ந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 


ராமநாதபுரம் தோழர். ஞானசேகரன் மாறுதல் , வாடிப்பட்டி தோழர் . காளிமுத்து மாறுதல் ஆகியவை  உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி கோட்டச் செயலர் தோழர் ஜேக்கப் ராஜ் , திண்டுக்கல் கோட்டப் பொருளர் தோழர். மைக்கேல்  சகாயராஜ் ஆகியோரின் IMMUNITY TRANSFER க்கு  சட்டப்படி அவர்களுக்கு இடமாறுதல் அளிக்க அந்தந்த கோட்டக் கண்காணிப்பாளர்களுக்கு  உரிய உத்திரவு தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நிலுவையில் இருந்த  அம்பை தோழியர் பகவதி அவர்களின் RULE 38  இடமாறுதல் என்பது  தற்போது நிறைவேற்றப்பட்டு அந்தத் தோழியர் RELIEF  அளிக்கப்பட்டு பணியில் அமர்ந்தார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநிலச் சங்கத்தின் இடையறாத முயற்சிக்கு உங்கள் மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.தென் மண்டலத்தில் கடந்த 4 மாதங் களாக இருந்த இருக்க நிலை தற்போது  தளர்ந்துள்ளது.

Courtesy: Circle Union, Chennai





No comments: