Tuesday, 29 January 2013

ANSWER KEY FOR POSTMAN/MAIL GUARD EXAM HELD ON 16.12.2012

 கடந்த 16.12.2012 அன்று நடைபெற்ற  தபால்காரர் தேர்வில்    கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  சரியான விடைக்கான  ANSWER  KEY  இலாக்காவினால்  வெளியிடப்பட்டுள்ளது .  தாங்கள்  எழுதிய தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்  அவரவர்கள் எழுதிய  விடைத்தாளின்  நகலை  தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று   இந்த  விடைகளுடன்  சரிபார்க்கலாம் . 

எனவே  தேர்வின் முடிவுகளில்  சந்தேகம்   உள்ளதாக எவரும்  கருதிட  வாய்ப்பு அளிக்காமல்  இருக்கவே இந்த  ஏற்பாடு . இந்த உரிமை  தொழிற் சங்கத்தினால்  பெறப்பட்டதாகும் .  

இதற்கு  முன்னதான காலங்களின்  இப்படி  ஒரு வாய்ப்பு  வழங்கப்பட வில்லை .  VALUATION  TRANSPARENCY ஆக  இருக்க வேண்டும் என்பதற்கே இந்த  ஏற்பாடு.  எல்லா  இலாக்கா தேர்வுகளுக்கும் இந்த முறை  தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.  தவறான நபர்களிடம் நமது  ஊழியர்கள் ஏமாந்து போகாமல்  இருக்க வேண்டும் என்பதை கோட்ட/ கிளைச் செயலர்கள்  ஊழியர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுகிறோம். 

ANSWER KEY  பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

No comments: