அன்புத் தோழர்களே வணக்கம் !
அஞ்சல் பயிற்சி மையம் , மதுரையில் LGO விலிருந்து எழுத்தராகத் தேர்வு பெற்று பணிப் பயிற்சிக்குச் சென்ற தோழர்களில் 12 பேர் , வகுப்புத் தேர்வில் 60% க்குக் குறைவாக மதிப்பெண் பெற்றதால் , பயிற்சி நீடிக்கப்பட்டு , பின்னரும் அடுத்த தேர்வில் 60% மதிப்பெண்களை எட்ட வில்லை என்று கூறி , பயிற்சி மைய இயக்குனரால் தகுதியற்றவர்களாக பரிந்துரைக்கப்பட்ட செய்தியையும் , அதன் தொடர்ச்சியாக உடன் இரு தோழர்கள் திருச்சி மண்டலத்தில் பணி இறக்கம் செய்யப்பட்டு MTS /MAIL MAN ஆக பணிக்கப் பட்டதையும் கடந்த 27.12.2012 அன்று நம்முடைய வலைத்தளத்தில் நாம் பிரசுரித்திருந்தோம்.
இதனை எதிர்த்து , இது சட்ட விரோதம் என்பதை சுட்டிக்காட்டி அஞ்சல் மூன்று மாநிலச் செயலரும், RMS மூன்று மாநிலச் செயலரும் நமது CPMG அவர்களுக்குக் கடிதம் அளித்துப் பேசினோம். கடிதத்தின் நகல் ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்ததை நினைவு கூர்கிறோம்.
மேலும் கடந்த 28.12.2012 அன்று புது டெல்லியில் நடைபெற்ற JCM இலாக்காக் குழு கூட்டத்தின் போது இது குறித்து DG அவர்களுடன் நமது JCM ஊழியர் தரப்புத் தலைவர் தோழர். KVS அவர்கள் விவாதித்ததாகவும், அதன் அடிப்படையில் உடன் இந்த உத்திரவு விலக்கிக் கொள்ள CPMG , TN அவர்களுக்கு உத்திரவிடப்படும் என்று DG அவர்கள் உறுதியளித்த தாகவும் நாம் 28.12.2012 அன்றே செய்தி வெளியிட்டி ருந்தோம்.
தற்போது அந்த உத்திரவு விலக்கிக் கொள்ளப் பட்டது மட்டுமல்லாமல் , பதவி இறக்கம் செய்யப்பட்ட தோழர்கள் மீண்டும் பதவி உயர்வு செய்யப்பட்டு SORTING ASSISTANT ஆகப் பதவி நியமனம் வழங்கிட CPMG அவர்கள் உத்திரவு அளித்துள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
R 3 'T ' கோட்டச் செயலர் நமது மாநிலச் சங்கங்களுக்கு நன்றி தெரிவித்து குறுஞ் செய்தியும் அனுப்பியுள்ளார்.
இது சட்ட விரோதமாக அடாவடி உத்திரவு இடும் தவறான அதிகாரிகளுக்கு ஒரு பாடம் என்பதை அறிவுறுத்த விரும்புகிறோம் !
இது நமது மாநிலச் சங்கங்களின் விடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதையும் பதிவு செய்கிறோம்.இந்தப் பிரச்சினையில் உடன் தலையிட்டு , உயர் அதிகாரிகளுடன் பேசி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த நமது தலைவர் தோழர் KVS அவர்களுக்கு நம் மாநிலச் சங்கங்களின் நன்றியினையும் பதிவு செய்கிறோம்.
அநீதி என்றும் வென்றதில்லை ! அதிகார மமதையும் தான் !
இந்த நிகழ்வு குறித்து உங்கள் உணர்வுகளை கீழே உள்ள COMMENTS பகுதியில் பதிவு செய்திட வேண்டுகிறோம் !
Courtesy: AIPEUP3TN website
No comments:
Post a Comment