அன்புத் தோழர்களுக்கு அன்பான வணக்கங்கள். நமது கோட்டங்களில் இருந்து எழுத்தர் காலியிடங்கள் நிரப்பாமையால் பிரச்சினை அதிகமாக உள்ளதாக நிறைய தோழர்களிடமிருந்து செல்லுமிடமெல்லாம் புகார் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து நமது மாநிலச் சங்க வலைத் தளத்தில் நவம்பர் 5 ம் தேதியன்று ஒரு செய்தியை பிரசுரித்திருந்தோம். அதனை உங்கள் பார்வைக்கு மீண்டும் கீழே வைக்கிறோம். பார்க்க பழைய செய்தி :-
========================================================================
கோட்ட/ கிளைச் செயலர்களே உங்கள் பார்வைக்கு :- நவம்பர் 5 2012
SHORTAGE OF STAFF : A REVIEW :-
2005, 2006, 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் SCREENING COMMITTEE SCRAP செய்யப் படுவதற்கு முன்னர் 'DEEMED TO HAVE BEEN ABOLISHED' என்று குறிக்கப்பட்டு , ஆனால் இன்னமும் ABOLISH செய்யப் படாமலும் , நிரப்பிட DOPT யில் இருந்து அனுமதி பெற முடியாமலும் 'SKELETON' இல் வைத்திருக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பதவிகள் மேலே கண்ட மத்திய அரசின் நிதி அமைச்சக உத்திரவின் மூலம் இனி நிரப்பப் பட வாய்ப்பே இல்லாமல் போய்விடும் .
இந்தக் காலியிடங்கள் தான், பல கோட்டங்களில் CURRENT YEAR VACANCY ஐ தவிர்த்து , SANCTIONED STRENGTH க்கும் WORKING STRENGTH க்கும் வித்தியாசமாக உள்ளது என்பதை பல தோழர்கள் அறியாமல், காலியிடங்கள் நிரப்பப் படவில்லை என்று கூறி வருகிறார்கள்.
13.10.2010 வேலை நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 2010, 2011 இல் நடைபெற்ற RECRUITMENT களில் DIRECT RECRUITMENT, RESIDUAL VACANCY, LGO EXAM, SC/ST BACK LOG VACANCIES, PH/OH VACANCIES என்று இதுவரை எழுத்தரில் மட்டும் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 33% பணியிடங்கள் தமிழகத்தில் நிரப்பப் பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான RECRUITMENT இல் தமிழகத்தில் கிட்டத்தட்ட மொத்த எழுத்தர் எண்ணிக்கையில் 12% பதவிகள் மேலே கண்ட இனங்களில் நிரப்பட முறையான காலியிட அறிவிப்பு வெளியிடப் பட உள்ளது .அதாவது அனைத்து காலியிடங்களும் நிரப்பப் பட உள்ளன
இதனையும் மீறி ,2005, 2006, 2007 மற்றும் 2008 க்கான SCREENING COMMITTEE VACANCIES தான் மீதமுள்ள காலியிடங்கள் ஆகும்.
இவை தவிர , வேலைப்பளு அதிகமாக உள்ளதன் காரணம் , எந்தவித வேலை நிர்ணய புள்ளி வரையறைக்குள்ளும் வராத AGENCY பணிகளை நாம் செய்து வருகிறோம்.இதற்கு ஈடாக , நமது இலாக்காவுக்கு COMMISSION ஆகப் பெறப்படும் தொகையில் 25% தொகையை, இந்த AGENCY பணிகளைப் பார்க்கும் ஊழியருக்கு INCENTIVE ஆக வழங்கிட உத்திரவு பெற்றுள்ளோம். இதை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தவில்லை என்று பல கோட்டங்களில் , புகார் அளிக்கப்பட்டதை CPMG அவர்களிடம் மாநில கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்துப் பேசி அதற்கான உத்திரவையும் பெற்றுத் தந்துள்ளோம். இது பின்னர் CCR, CR,SR மண்டலங்களில் BI-MONTHLY MEETTING களிலும் வைக்கப் பட்டு மீண்டும் தலைமட்ட உத்திரவுகள் இடப்பட்டுள்ளன. அந்த BI-MONTHLY MEETING MINUTES நகலும் நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு , மீண்டும் அதன் நகல் கோட்ட/கிளைச் செயலர்களுக்கு அனுப்ப பட்டுள்ளது. என்பதை நினைவு கூர்கிறோம்.
RPLI பகுதியில், PLI பகுதியில். புதிய பணி நியமன ஆணை எதுவும் மத்திய அரசில் வழங்கிட வில்லை. எனவே அந்தப் பணியிடங்களுக்கான அதிகப்படியான வேலைப்பளுவும் நம்மிடையே கூடியுள்ளது. புதிய பணியிட உருவாக்கத்திற்கு (CREATION OF POSTS) மத்திய அரசில் தடை அனைத்து துறைகளுக்கும் இருப்பதால் , இந்தப் பிரச்சினையில் ஒரு தேக்க நிலை உள்ளது.
இந்த நிலையில்தான், மாநில அளவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை இடைவிடாது மாநிலச் சங்கம் செய்து வருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்
=====================================================================
தற்போது ,
இதனையும் மீறி எழுத்தரில் காலியிடங்கள் அதிகம் இருப்பதாகவும் அதற்குக் காரணம் 2006 முதல் 2008 வரை நேரடி நியமனத்தில் 2/3 RD ABOLISH செய்திட SKELETON இல் வைத்தது போக, மீதி உள்ள 1/3rd காலியிடங்கள் பல கோட்டங்களில் நிரப்பப் படவில்லை என நமக்கு புகார் வந்துள்ளது.
வேறு சில கோட்டங்களில் residual vacancy யானது 2000 முதல் 2005 வரை நிரப்பப் படாமல் irregular assessment செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் sanctioned strength க்கும் working strength க்கும், நடப்பில் நிரப்பப் படவுள்ள காலியிடங்கள் தவிர்த்துக் கூட, நிறைய வித்தியாசம் உள்ளது எனப் புகார் வந்துள்ளது .
எனவே நம்முடைய மாநிலச் சங்கத்தில் இது குறித்து நடைபெற உள்ள FOUR MONTHLY MEETING இல் CPMG , TN அவர்களிடம் பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளோம் . பிரச்சினையை விவாதிக்கும் போது உரிய புள்ளி விபரங்களுடன் விவாதித்தால் நிச்சயம் பிரச்சினை தீரும். இல்லையென்றால் அதில் எந்த பிரயோசனமும் இருக்காது . எந்தவித RECORDED SUPPORT ம் இன்றி ஒவ்வொரு கோட்டத்திற்கும் 20 எழுத்தர் அதிகம் வேண்டும் என்று கேட்கமுடியாது என்பது உங்களுக்கும் தெரியும்.இது குறித்து அந்தந்த RECRUITMENT ஆண்டுகளில் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த சிக்கல்கள் வந்திருக்க வாய்ப்பில்லை.
எனினும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்திட மாநிலச் சங்கத்திற்கு பாதிக்கப் பட்டுள்ள கோட்ட/கிளைச் செயலர்கள் அவர்கள் பங்கினை ஆற்றினால் மட்டுமே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதால் உங்களுக்கு ஒரு வேண்டுகோளை நாம் வைக்கிறோம்.
கீழே கேட்கப் பட்டுள்ள புள்ளி விபரங்களை , கோட்ட அலுவலகத்தில் இருந்து நேரிடையாகவோ, அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றோ வெகு விரைவில் மாநிலச் சங்கத்திற்கு email செய்திட வேண்டுகிறோம். உடன் உங்கள் பணியை விரைவு படுத்திட வேண்டுகிறோம்.
1. Sanctioned strength of P.A.s as on 31.12.2012
2. Working strength of P.A.s as on 31.12.2012.
3. Total shortage of P.A.s as on 31.12.2012.
4. Announced vacancies for the year 2011 & 2012
a) by means of direct recruitment.
b) by means of LGO promotion exam.
c) residual vacancies, due to non filling up of LGO vacancies during LGO rectt.
of 2010.
d) total .
5.Deducting ITEM 4(d ) from item 3.
a) Is there any resignation/promotion/death after announcement of the vacancies
for the year 2011, 2012. if so How many no. of P.A.s.
6) Whether 2/3rd direct rectt. vacancies during the year 2005 to 2008 were abolished.
If so how many P.A. post were abolished. Whether it is deducted from the current
sanctioned strength.
7. Whether filling up of 1/3 rd direct rectt. vacancies during the year 2006, 2007 and 2008 were made. If so how many no. of P.A.s filled.
8) Whether filling up of residual vacancies ( LGOs not filled in) during the year 2000 , 2001,2002,2003,2004 and 2005. were made. If so how many no. of P.A.s filled.
Then consolidate all these , along with the no. of officials diverted from general branch to the un normed works such as RPLI, IMT, SM, DSM, ME etc.
தோழர்களே! நிச்சயம் இந்த உதவியை மாநிலச் சங்கத்திற்கு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த செய்தியை பார்க்கும் தோழர்கள் தயவு செய்து அந்தந்த கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு இதனைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். அவர்களுக்கு பிரச்சினையை தீர்க்க உதவிடுமாறு வேண்டுகிறோம்.
அன்புடன் உங்கள் மாநிலச் செயலர்.
No comments:
Post a Comment