அன்புத் தோழர்களே ! வணக்கம் !
கடந்த 19.07.2012 முதல் தமிழகத்தில் இருந்து தொடர்ந்து நமது அஞ்சல் மூன்றின் தோழர்கள் டெல்லி நகரத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு சென்றவண்ணம் உள்ளனர் . நேற்று DURANTO விரைவு வண்டியில் கிட்டத்தட்ட 100 தோழர்கள் பயணித்துள்ளனர். இன்று இரவு 10.00 மணிக்கு கிளம்ப உள்ள தமிழ்நாடு விரைவு வண்டியில் நமது அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் மற்றும் நமது மாநிலச் செயலர் உள்ளிட்ட 100 தோழர்கள் பயணிக்க உள்ளனர். எதிர் வரும் 30.07.2012 அன்று தான் சென்னை திரும்ப உள்ளனர்.
எனவே இந்த வலைத்தளத்தில் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க இயலாது எனினும் , நமது மாநில உதவித் தலைவர் தோழர். V. வெங்கட்ராமன் அவர்கள் முக்கிய செய்திகளை பிரசுரிப்பார் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பேரணி வாழ்த்துக்களுடன்
J.R. , மாநிலச் செயலர்.
No comments:
Post a Comment