அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! ஏழாவது ஊதியக் குழு உடன் அமைத்திட வேண்டும் , 50% பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும் என்று கோரி நாம் போராடி வரக்கூடிய நேரத்தில் , நம்மை ஆளக்கூடிய அரசாங்கம் , அதன் அங்கமாக இருக்கக் கூடிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த நிலையில் சிந்திக்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கடமை ஒரு அரசு ஊழியர் என்கிற முறையில் நமக்கு இருக்கிறது . இது குறித்து பத்திரிகைகளில் வந்த சில செய்திகளை உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம் ... படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்குத் தெரிவிக்கவும் ..
குறிப்பு : வறுமைக் கோடு என்ற அரசாங்கத்தின் அளவீட்டை வைத்து மானிய விலைகளில் பொருள்கள் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப் படுகின்றன . இது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இனி வழங்கப் படும் . அதாவது கெரசின், அரிசி, கோதுமை,சர்க்கரை, பாமாயில் , சமையல் எரிவாயு போன்றவை ஆகும் .
வறுமைக் கோடு என்பது தற்போது மாற்றி அமைக்கப் பட்டுள்ளது . அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.27.20 க்கு மேல் கிராமப் புறத்திலும் , நாள் ஒன்றுக்கு ரூ. 33.33 க்கு மேல் நகரப் புறத்திலும் வருமானம் உள்ளவர்கள் இனி வறுமைக் கோட்டுக்கு கீழ் வர மாட்டார்கள். அதாவது இனி தினப்படி பிச்சை எடுப்பவர்கள் கூட வறுமைக் கோட்டுக்கு மேல் தான் வருவார்கள் . அப்படியானால் அரசு ஊழியர்களின் ஊதிய நிலையின் படி மத்திய அரசின் பார்வையில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் ! வாழ்க வளமுடன் !
ஒரு ரூபாயில் ஒரு வேளை முழு உணவு சாப்பிடலாம்......மத்திய அமைச்சர் திரு பாரூக் அப்துல்லா .
ஐந்து ரூபாயில் திருப்தியாக ஒரு வேளை உணவு சாப்பிடலாம் .. ரஷீத் மசூத், காங்கிரஸ் M.P.
பனிரண்டு ரூபாயில் ஒரு வேளைஉணவு தாராளமாக சாப்பிடலாம் .. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பாப்பர் .
******************
பார்க்க பத்திரிக்கை செய்தி :-
.jpg)





