Day long Dharna prog. of Confederation conducted successfully in front of CPMG Office , T.N.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும், 50 சதவீத பஞ்சபடியை அடிப்படைசம்பளத்துடன் இணைக்க வேண்டும், இதன் பயன்களை 1.1.2011 முதல் அமல் படுத்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும, கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் ஊதிய மாற்றத்தையும் 7வது ஊதியக்குழுவே பரிசீலிக்க வேண்டும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் போனஸ் உச்சவரம்பு ரூ3500 என உயர்த்தப்படவேண்டும் , அவர்களது வேலை நேரக் கணக்கீட்டில் மாற்றம் வேண்டும் , பணியில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திமத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் நேற்று (20.06.2013) நாடு தழுவிய அளவில் முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது .
தமிழகத்தில் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் சென்னை அண்ணா சாலை CPMG அலுவலக வாயிலில் அஞ்சல் RMS தமிழ் மாநில இணைப்புக் குழுவின் கன்வீனர் தோழர். J .ராமமுர்த்தி தலைமையில் இந்த முழு நாள் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலர் தோழர். M . துரைபாண்டியன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். தோழர் A .சுந்தரம் (CONFEDERATION) அவர்கள் வரவேற்புரையாற்ற , DREU(RAILWAYS ) சங்கத்தின் தலைவர் தோழர். R . இளங்கோவன் துவக்க உரை நிகழ்த்தினார்.
கீழ்க் கண்ட தலைவர்கள் போராட்டத்தை வாழ்த்தியும் விளக்கியும் பேசினார் :-
Com. A. Sathasivam, President, NFAEA (Atomic Energy), Kalpakkam.
Com.M.S.Venkatesan, General Secretary, ITEF, (Inome Tax), T.N.
Com.S. Balasundaram, Addl. Secretary, CGWBEA( Water Board), T.N.
Com.M.P. Uthayan , President, MCAA, TN ( Audit & Accounts)
Com.Parthiban, General Secretary, Central Excise Inspectors Assn., T.N.
Com. Jayakumar, Sec., AG's Office Audit Wing.
Com. Lakshmi Swaminathan, Civil Accounts Employees Association
Com. Ranganathan, Atomic Energy, Kalpakkam.
Com. Samraj, Secretary, C.O.C., Shastri Bhavan.
Com. S. Ragupatahy, Asst.Sec. Genl, NFPE ( Postal)
Com. N. Gopalakrishnan, Wkg President, AIPEU Gr.C CHQ(Postal)
Com. K. Sankaran, Circle Secretary, NFPE R3 TN
Com. Ragupathi Umasankar, Circle Sec., Admin NFPE
Com. Appanraj, Circle Sec, SBCOEA, TN (Postal)
Com. Leela Raman, AIPEU GDS NFPE, Chennai City North Dn.
Com. Angel Sathiyanathan, President, State Mahila Committee, NFPE P3 TN
இறுதியாக தோழர் M .துரைபாண்டியன் அவர்கள் சிறப்பானதொரு விளக்க உரை நிகழ்த்தினார். அஞ்சல் மூன்றின் உதவிப் பொதுச் செயலரும் மாநில நிதிச் செயலரும் ஆகிய தோழர். A . வீரமணி நன்றி கூற மாலையில் தர்ணா போராட்டம் இனிதே முடிவுற்றது.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சுமார் 300 தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment