Wednesday 2 April 2014

கோவை மண்டல பெருந்திரள் மனு அளிப்பு போராட்டம் வெற்றி !

கோவை கோட்ட NFPE  மற்றும் FNPO  சேர்ந்த JCA  சார்பாக மண்டல அதிகாரியிடம் குறை தீர் மனு அளிப்பு  போராட்டம் நடத்துவதாக முதலில் அறிவிக்கப் பட்டிருந்தது . பின்னர்  நம்முடைய அஞ்சல்  மூன்று மண்டலச் செயலர் தோழர் சஞ்சீவி அவர்களால் அந்தப் போராட்டம்  மண்டல அளவிலான போராட்டமாக மாற்றப் பட்டது 


கடந்த 28.03.2014 வெள்ளி மாலை  சுமார் 05.00மணியளவில் இந்தப் போராட்டம் மேற்கு மண்டல  அலுவலகம் வாயிலில் துவங்கியது . 

முக்கிய கோரிக்கைகளாக

1. மண்டல அலுவலகத்தில் DEPUTATION  என்ற பெயரில்  கோட்டங்களில் இருந்து எடுக்கப் பட்டு காலக் கெடு  இன்றி  10 - 12 ஆண்டுகளாக  அங்கேயே பணியாற்றுவோரை  உடன் விடுவித்து அவர்களின் சொந்தக் கோட்டங் களுக்கு  திரும்ப அனுப்பிட வேண்டுதல் .

2. TARGET என்ற பெயரில்  RPLI ./SAVINGS ACCOUNT/ TRAINING  என்று தினம் தினம்  TORTURE செய்வதை  மண்டல நிர்வாகம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் 

3. ஆட்பற்றாக்குறையை தீர்க்க  OUTSOURCING  முறையில் ஆட்களை உடன் பயன்படுத்திக் கொள்ள உத்திரவிடவேண்டும் 

 என்பது  உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி  மாபெரும் பெருந்திரள்  மனு அளிப்பு  போராட்டம்  நடத்தப்பட்டது. கோவை கோட்டம் மற்றும் கோவை மண்டலத்தில் உள்ள திருப்பூர் ,பொள்ளாச்சி, ஈரோடு,சேலம் மேற்கு கோட்டம் பகுதிகளில் இருந்து P3,P4 மற்றும் GDS தோழர்கள் /தோழியர்கள் ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

மண்டல அலுவலகத்தில்  கோரிக்கை மனுவை அளிக்க காத்திருந்த JCA  வைச் சேர்ந்த அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு NFPE  GDS  மாநிலச் சங்க நிர்வாகிகளை சந்திக்காமல் அங்கு பணி  புரிந்து  ஒய்வு பெறும்  ஒரு ஊழியரின்  பணி  நிறைவு விழாவுக்கு மண்டல இயக்குனர் (பொறுப்பு) அவர்கள்  சென்று விட்ட காரணத்தால்  தொடர் முழக்கப்போராட்டம்  துவங்கியது .

பின்னர் JCA குழுவினர் மீண்டும் மண்டல இயக்குனர் (பொறுப்பு) அவர்களை 
சந்தித்து மனு கொடுக்க சென்ற போது  அவர்களை சந்திக்க மண்டல இயக்குனர் மறுத்துவிட்டார்.APMG(STAFF) அவர்களும்  பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கை மனுவை வாங்க மறுத்து விட்டார். தொடர்ந்து  பலமுறை  முயற்சித்தும் மனுவை பெறவும் ,JCA வை சந்திக்க மறுத்ததனால் குழுமியிருந்த அனைத்து தோழர்களும் முக்கியமாக தோழியர்களும் மிக ஆவேசமடைந்து மண்டல அலுவலகம் முன் அமர்ந்து விட்டனர்.

இதன் பின்னர் இந்த பிரச்சினை  இரவு 08.15  மணியளவில் NFPE  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர் . J .R . அவர்கள் கவனத்திற்கு தொலைபேசி மூலம் , அஞ்சல் மூன்று  மண்டலச் செயலர் தோழர் சஞ்சீவி அவர்களால் கொண்டு  செல்லப்பட்டது. மேலும் இது போலவே  அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர். N . S . அவர்களிடமும்  போராட்டக் குழுவினர் இந்த பிரச்சினையை கொண்டு சென்றனர். 

 இதன் பின்னர்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள் பிரச்சினையின் தீவிரத்தை  தொலை பேசி மூலம் மேற்கு மண்டல PMG  (பொறுப்பு) அவர்களுடனும் ,மண்டல இயக்குனர்( பொறுப்பு)   அவர்களுட னும் நேரடியாக 
 தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடுத்துக் கூறியதன் விளைவாக இரவு 
 
8.50 மணியளவில் JCA  வின்  கோரிக்கை மனுவை மண்டல அலுவலகத்தில் பெற்றுகொண்டதுடன் ,  கோரிக்கைகளை PMG அவர்களின்நேரடிப்  பார்வைக்கு கொண்டு சென்று உடன் நடவ டிக்கை எடுப்பதாகவும் உறுதி  அளிக்கப் பட்டது. 

இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய நமது  அஞ்சல் மூன்று  மண்டலச் செயலர் தோழர். சஞ்சீவி , அஞ்சல் மூன்றின் மாநில உதவித் தலைவர் தோழர்  எபினேசர் காந்தி, நமது அஞ்சல் நான்கு மண்டலச் செயலர் தோழர். பழனிச்சாமி , நமது மாநிலச் சங்க அமைப்புச் செயலர் தோழர். திருப்பூர்  ராஜேந்திரன்  உள்ளிட்ட  தோழர்களுக்கு  நம்முடைய வீர வாழ்த்துக்கள் . 

போராட்டத்தில்  நேரடியாக  தோழர்களைத் திரட்டி  கலந்துகொண்ட கோவை கோட்ட அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு  சங்கப் பொறுப்பாளர்களுக்கும்  ஈரோடு அஞ்சல் மூன்று கோட்ட செயலர் தோழர். சுவாமிநாதன், NFPE P3 
 பொள்ளாச்சி கோட்ட செயலாளர் தோழர் .அய்யாசாமி NFPE P4 
 
கோவை கோட்ட செயலர் தோழர். ஸ்ரீதர் ,, NFPE P4 பொள்ளாச்சி 
 
கோட்ட செயலாளர் தோழர் கிருஷ்ணசாமி , FNPO P3 கோவை கோட்ட 
 
செயலர் தோழர்.சுப்பராஜ் , FNPO P3 பொள்ளாச்சி கோட்ட செயலர்
தோழர். மோகன்ராஜ் , NFPE R3 கோவை கோட்ட செயலர் தோழர்
K.V.ராஜேந்திரன் ஆகியோருக்கு  நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் போராட்ட வாழ்த்துக்கள் . இரவு 09.00 மணி வரை தோழியர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தில்  தீவிரமாக ஈடுபட்டது  பாராட்டுக் குரியது . அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் !

போராட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் கீழே பார்க்கவும் :-



No comments: