இதுவரை தபால் வழிப் பயிற்சியாக இந்தி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், நேரடி வகுப்புகளில் கலந்து பயில மத்திய அரசு ஊழியர்களுக்கு மதுரையில் இந்தி பயிற்சிக்காக ஜனவரி 2014 முதல் மே 2014 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள மதுரை அருகே உள்ள மத்திய அரசு மற்றும் அஞ்சல் ஊழியர்கள் தங்கள் பெயரினை அந்தந்த அலுவலகங்களில் அளிக்கலாம்.
மதுரைக் கோட்ட அஞ்சல் தோழர்களுக்கு இது சம்பந்தமாக, BIII/HTS/Dlgs/12-13 dated at Madurai 625002 the
05.12.13 என்ற சுற்றறிக்கை, மதுரைக் கோட்ட அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கால தாமதமாகி விட்டதாலும், பயிற்சி வகுப்பிற்கு குறைந்த நபர்களே தங்கள் பெயரினை அளித்ததாலும் இன்றே பயிற்சி வகுப்பிற்கான விருப்பக் கடித்தத்தை உங்கள் அலுவலக மேலாளர் மூலமாக கோட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும்.
இந்தி தேசிய மொழி பயில இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என்பதாலும், இந்தி பயின்றால் ஒரு INCREMENT- ம் கிடைக்கும் என்பதாலும்,
அனைத்து அஞ்சல் தோழர்களும் இந்த நேரடி இந்திப் பயிற்சிக்கான வாய்ப்பினைத் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment