Friday, 5 April 2013

GO AHEAD WITH MEMBERSHIP DRIVE ! PROVE NFPE IS ALWAYS THE STRONGEST !


அன்புத்  தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ! 

இதன் கீழே  நமது  அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தில்  புதிய உறுப்பினர் சேர்த்திட உரிய விண்ணப்ப  படிவமும் ,  மாற்றுச் சங்கத்தில் இருந்து விலகிட ஒரு படிவமும்  அளித்துள்ளோம் 

அதே போல AIPEU  GDS (NFPE ) சங்கத்தில் புதிய உறுப்பினரைச் சேர்த்திட  ஒரு படிவமும் , மாற்றுச் சங்கத்தில் இருந்து விலகி சந்தாப் பிடித்தத்தை  நிறுத்திட  ஒரு படிவமும் அளித்துள்ளோம்.

நம்முடைய  கோட்ட/ கிளைச்  செயலர்கள் , மற்றும்  இதர பொறுப்பாளர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 க்குள் புதிய உறுப்பினரை சேர்த்திடவும் , இதர சங்கங்களில்  இருந்து வரும்  உறுப்பினர்களிடம்  அதற்கான  படிவத்தை  அளித்து  அவர்களது  சந்தா பிடித்ததை நிறுத்திடவும் , அதே நேரத்தில் நம் சங்கத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்துப் பெற்றிடவும்  .கோரப்படுகிறார்கள் .


எந்தக் காரணம் கொண்டும் , இரண்டு படிவங்களும் ஏப்ரல் 30 க்கு மேல் DDO  விடம்  அளித்திடக் .கூடாது .  எல்லா படிவங்களையும் சரிபார்த்த பிறகு  கோட்ட/ கிளைச் செயலர்  படிவத்தில் கையெழுத்திட்டு , அந்தப் படிவங்களுடன்  ஒரு பட்டியல் (லிஸ்ட்)  தயார் செய்து  மூன்று  நகல் எடுத்து  அதனை DDO ( CONCERNED  POST  MASTER ) விடம்  அளித்தபின் , அவரிடம்  RECEIVED  COPY  என்று கையெழுத்து இட்ட  ஒரு நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் 

அதே போல  புதிய  அல்லது மாறி வரும் உறுப்பினரிடம்  , உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தில்  இரண்டு இடங்களில்  கையெழுத்து பெற்றிட  மறக்கக் கூடாது .

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  நிச்சயம்  நமது சங்கத்தில்  உறுப்பினர் சேர்க்கை மிக அதிக அளவில் இருந்திட  , கடுமையாக உழைக்குமாறு  மாநிலச் சங்கம்  உங்களை வேண்டுகிறது . உங்கள்  உழைப்பின் வெற்றியை  மாநிலச் சங்க வலைத்தளத்தில்  நிச்சயம் நாம் பகிர்ந்து கொள்வோம் !  

உங்களின் அதீத ஈடுபாட்டை  நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் !
நன்றியுடன் .............. 

 மாநிலச் செயலர்.  





No comments: