முறைகேடான சுழல் மாறுதல் உத்தரவுக்கு நீதிமன்ற இடைக்கால தடை !
சேலம் மேற்கு கோட்டத்தில் இலாக்கா விதிகளை மீறி, சுழல் மாறுதல் செய்வதற்கான இலாக்காவின் வழி காட்டு நெறிமுறைகளை மீறி , தன்னிச்சையாகவும் , தான் தோன்றித்தனமாகவும் INTEREST OF SERVICE என்ற பெயரில் 15 தோழர்/ தோழியர்களுக்கு சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரால் அளிக்கப் பட்ட இட மாறுதல் உத்திரவை எதிர்த்து ,
சேலம் மேற்கு அஞ்சல் மூன்று கோட்டச் செயலரும் ,
நமது மாநிலச் சங்கத்தின் மேற்கு மண்டலச் செயலருமான
தோழர். C. சஞ்சீவி அவர்களால்
சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் தொடரப் பட்ட வழக்கில் இன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது என்பதை தோழர். சஞ்சீவி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப் பட்ட சேலம் மேற்கு கோட்ட தோழர்/ தோழியர்களுக்கு இது நிச்சயம் மகிழ்வை ஏற்படுத்தும். தன் தோழர்களின் பாதிப்புகளைக் களைந்திட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து அதில் வெற்றியும் பெற்று வரும் தோழர். சஞ்சீவி அவர்களின் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் தொழிற்சங்கத்தில் இளைய தோழர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை ஏற்படுத்தும்.
அவர்தம் தொழிற்சங்க வாழ்க்கை பல இளைய தோழர்களுக்கு வழிகாட்டுமுகத்தான் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
அவரது பணி தொடரட்டும் ! மேலும் சிறக்கட்டும் !
அவருக்கு நம் மதுரை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment