அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கமும்
பொங்கல் நல் வாழ்த்துக்களும் !
ஏற்கனவே தென் மண்டலத்தில் தேங்கிக்கிடக்கும் ஊழியர் பிரச்சினைகள் குறித்தும் , மண்டல மற்றும் கோட்ட அதிகாரிகளின் அடக்கு முறைகள் குறித்தும் நமது தமிழக அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் சார்பாக மண்டல அதிகாரி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்து கடந்த 03.09.2013 அன்று நாம் பேச்சு வார்த்தை நடத்தியதும் அதன் விளைவாக சில பிரச்சினைகள் தீர்க்கப் பட்டதும் , நமது கோரிக்கை மனுவிற்கு எழுத்துபூர்வமாக பதில் பெற்றதும் , அதில் பல பிரச்சினைகள் தீர்க்கப் படாமல் மழுப்பலான பதிலாக அளிக்கப் பட்டிருந்ததும் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் - RMS பகுதி நிர்வாகிகளுக்கும் , கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் நன்கு தெரியும்.
அளிக்கப் பட்ட பதிலின் நகல் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் ஏற்கனவே அனுப்பப் பட்டிருந்ததும் நினைவில் இருக்கும் .
செப்டம்பர் திங்கள் பேச்சு வார்த்தைக்குப் பிறகு 03.09.2013 அன்று மாலை நடைபெற்ற கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் நமது அறிவிக்கப் பட்ட போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டதாக நல்லெண்ண அடிப்படையில் ஏகமனதாக முடிவெடுக்கப் பட்டதும் நினைவில் இருக்கும்.
மாறாக , தற்போது தென் மண்டலத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்பதை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாதாரண தோழர்கள் முதல் , கோட்ட/ கிளைச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளின் கோபக் குரல்= கூக்குரல் மூலம் நம்மால் நன்கு உணர முடிகிறது.
எனவே , இது குறித்து தீர்மானிக்கப்பட்ட அடுத்த கட்ட போராட்டம் திறம்பட நடத்துவதற்கான திட்டம் வகுத்திட தமிழக NFPE அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் சார்பாக தென் மண்டலத்தில் உள்ள NFPE இன் அனைத்து உறுப்புச் சங்கங்களின் கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டம் கீழ்க் காணும் தேதியில் நடைபெற உள்ளது .
நாள் : 05.01.2014 ஞாயிறு நேரம் : காலை : 10.00 மணி
இடம் : தல்லாகுளம் தலைமை அஞ்சலகம் , மதுரை .
எனவே NFPE இன் உறுப்புச் சங்கங்களின் தமிழ் மாநிலச் செயலர்கள், தென் மண்டல நிர்வாகிகள் மற்றும் தென் மண்டலத்தின் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் பங்கினை ஆற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.
தோழமையுள்ள
K . ராஜேந்திரன், J . இராமமூர்த்தி
தலைவர் கன்வீனர்
தமிழ் மாநில அஞ்சல் - RMS-MMS , GDS இணைப்புக் குழு .
OOOOO
இந்த வலைத்தள அறிவிப்பை பார்க்கும் நிர்வாகிகள், இதனை பார்க்காத நிர்வாகிகளுக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம். இதனையே அழைப்பாக ஏற்றிடவும் வேண்டுகிறோம்.
OOOOO
No comments:
Post a Comment