அன்புத் தோழர்களே.... தோழியர்களே.....
10.01.14 அன்று 500க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் தென் மண்டல அதிகாரிகளின் அராஜகப் போக்கினைக் கண்டு வெகுண்டெழுந்து, தொடர்முழக்கப் போராட்டத்தில் குதித்தனர். காவல் துறை நண்பர்களை ஏவியும், தென் மண்டல அலுவலக வாயில் கதவுகளைப் பூட்டியும், புரட்சிகர தோழர்களைத் தடுக்க எண்ணிய தென் மண்டலத்தின் சூழ்ச்சிகள் தவிடு பொடியானதும், அராஜக அதிகாரிகளை எதிர்த்து, எழுப்பிய கோஷங்கள் தென் மண்டல அலுவலகமே ஆடிப் போனதும் அனைவரும் அறிந்ததே.....
அழுத்தத்தினை உணர்ந்த தென் மண்டல தலைவர், புதிதாக அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான தீர்வினை எட்ட வேண்டிய ஆயத்தப் பணிகளுக்காக, 21.01.14 அன்று வரை கால அவகாசம் அளித்து, 21.01.14 அன்று அனைத்து கோரிக்கைகளும் தீர்க்கப்படும் என்கின்ற உத்திரவாதத்தினைத் தென் மண்டல தலைவர் அவர்கள் அளித்தார்.
நாளை நடைபெறும் இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் 10.01.14 அன்று அளிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் தீர்க்கப்படவில்லையெனில், நாளையே, மாநிலம் தழுவிய போராட்டத்திற்கான அறைகூவல் விடுக்கப்படும் என்று நமது மாநிலச் செயலர் அன்புத் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் அன்றே உத்திரவாதம் அளித்துள்ளார்.
அதன்படி, நாளை 21.01.14 நல்லதொரு தீர்ப்பு, மண்டல அலுவலகத்தால் எழுதப்படவில்லையெனில், தீர்ப்பு மாநிலச் சங்கத்தின் மாநிலம் தழுவிய போராட்டங்களால் எழுதப்படும்!!!
அதன்படி, நாளை 21.01.14 நல்லதொரு தீர்ப்பு, மண்டல அலுவலகத்தால் எழுதப்படவில்லையெனில், தீர்ப்பு மாநிலச் சங்கத்தின் மாநிலம் தழுவிய போராட்டங்களால் எழுதப்படும்!!!
No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.