தமிழ் மாநில NFPE பேரியக்கத்தின், அஞ்சல் மூன்று - அஞ்சல் நான்கு - GDS சங்கங்கள் - RMS - MMS ஆகிய அனைத்து சங்கங்களும் ஓரணியாகத் திரண்டு, மதுரை மண்டலத்தில் நடைபெறும் காட்டாட்சியை முடிவிற்குக் கொண்டு வர நாளை 10.01.14 அன்று காலை 0930 மணியளவில் தொடர் முழக்கப் போராட்டத்தினை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதுரைக் கோட்டத்திற்கென கீழ்க்காணும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் வரை மாநிலச் சங்கத்தின் ஆணைக்கு இணங்க தொடர் போராட்டங்கள் நடத்த மதுரை மண்டலத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊழியர்களும் தங்களால் முடிந்த வரை விடுப்பு எடுத்துக் கொண்டு காலந்தவறாமல் 10.01.14 அன்று காலை 0930 மணிக்கு மதுரை தென் மண்டலத்தின் வாயிலில் கூடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.